சாலையில் கவனம், தவிர்ப்போம்  மரணம் – நித்தின் கட்கரி

சாலையில் கவனம், தவிர்ப்போம் மரணம் – நித்தின் கட்கரி

Share it if you like it

மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி நாக்பூரில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட அவர். நாடு முழுவதும் ஆண்டுத்தோறும் 5 லட்சம் சாலை விபத்துக்கள் ஏற்படுகிறது. இதில் 1.5 லட்சம் பேர் மரணம் அடைவதும், சுமார் மூன்றரை லட்சம் பேர் காயமடைகின்றனர் இது மிகவும் கவலையளிக்கிறது.

நாடு முழுவதும் ஜனவரி 11-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை சாலைப் போக்குவரத்து வாரமாக கடைப்பிடிக்கப்படுகிறது. எத்தனையோ நடவடிக்கைகளை எடுத்தும் கூட சாலை விபத்துகளின் எண்ணிக்கையை அரசால் குறைக்க முடியவில்லை.

சாலை விபத்துகளில் நேரிடும் உயிரிழப்புகளால் மட்டும் நமது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 2 சதவீதம் இழப்பு ஏற்படுகிறது. மக்கள் மத்தியில் போக்குவரத்து விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வும், அதனை பின்பற்ற வேண்டும் என்ற கடமை உணர்வுமே சாலை விபத்துகளை தடுக்க முடியும். இவ்வாறு அவர்  கூறியுள்ளார்.


Share it if you like it