குடியுரிமை திருத்தச் சட்டம் நாட்டின் பாதுகாப்பை கருதியே மத்திய அரசு கொண்டு வந்தது. ஆனால் எதிர்க்கட்சிகள் தங்களின் அரசியல் ஆதாயத்திற்காக மக்களை குழப்பி அவர்களை தூண்டி விட்டு, நாட்டின் அமைதி, சட்டம், ஒழுங்கினை சீர்குலைக்கும் நோக்கில் செயல்படுகிறார்கள் என்று மக்கள் குற்றம் சாட்டி வரும் நிலையில்.
பெங்களூரில் 17 வயது உடைய சிறுமி உடலில் பலத்த காயங்களுடன் சாலையோரம் தூங்கி கொண்டிருந்தால். தகவல் கிடைத்தவுடன் காவல்துறை, அச்சிறுமிக்கு உரிய சிகிச்சை அளித்து, அவளிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அச்சிறுமியோ தான் பங்களாதேஷ் நாட்டை சேர்ந்தவள் என்பதும், எனக்கு இந்தியாவில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறினர். அவர்களை நம்பி தான் இங்கு வந்ததாக கூறினால்.
ஆனால் என்னை அழைத்து வந்தவர்கள், கட்டாயப்படுத்தி விபச்சாரத்தில் ஈடுப்படுத்தி விட்டனர். அவர்களிடம் இருந்து தப்பி ஓடி இங்கு வந்து விட்டேன் என்று கண்ணீர் மல்க காவல்துறையிடம் கூறினால். இதனை அடுத்து அவளின் புகாரின் அடிப்படையில் பெங்களூரில், பதுங்கி இருந்த மொஹமதா மடிசா, கிஸ்லமுல்லா, இம்ரான் முல்லா, சதி, பஜிதா என, ஒரு பெண் உட்பட ஜந்து பங்களாதேஷ், நாட்டவரை போக்ஸோ சட்டத்தில் கைது, செய்து காவல்துறை அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.