இந்தியா, சீனா, இடையில் தற்பொழுது போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. சீனாவின் அத்துமீறல்களுக்கு இந்தியா தக்க பதிலடியை கொடுத்து வருகிறது. இந்நிலையில் சீனாவிற்கு எதிராக ஆன்மீக அமைப்புகளும் தற்பொழுது களத்தில் இறங்கியுள்ளது.
ஹரே கிருஷ்ணா இயக்கமான இஸ்கான் அமைப்பு குருக்ஷேத்ராவில் மிகப்பெரிய கிருஷ்ணர் ஆலயத்தை கட்டி வருகிறது. கோயிலுக்கு தேவையான நான்கு பிரம்மாண்டமான பளிங்கு குதிரை சிலைகளை. சீனாவில் இருந்து இறக்குமதி செய்ய திட்டமிட்டு இருந்தது.. இந்தியாவிடம் தொடர்ந்து வன்முறை போக்கை மேற்கொண்டு வரும் சீனாவிற்கு தனது எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக குதிரை சிலைக்கான ஆர்டரை தற்பொழுது இஸ்கான் அமைப்பு ரத்து செய்துள்ளது.
சீனாவுக்கு பதிலாக இந்தோனேசியாவிலிருந்து பளிங்கு குதிரை சிலைகளை பெற இஸ்கான் அமைப்பு தீர்மானித்துள்ளதாக குருக்ஷேத்ரா இஸ்கான் தலைவர் சாக்ஷி கோபால் தாஸ் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
https://twitter.com/FrontalAssault1/status/1301774480696582146