Share it if you like it
ஐ.நா., பொது சபையின் மனித உரிமைகள் குழு கூட்டம் நடைபெற்றது. இதில், அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான் உள்ளிட்ட, 39 நாடுகள் ஒன்றிணைந்து வெளியிட்ட அறிக்கையில், சீனா, சிறுபான்மையினர் மீது நடத்தும் மனித உரிமை மீறல் நடவடிக்கைகள் கவலை அளிக்கின்றன. குறிப்பாக, ஜிங்ஜியாங் மாகாணத்தில், 10 லட்சத்திற்கும் மேற்பட்ட உய்குர் முஸ்லிம்கள், முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டு, அரசியல் ரீதியாக மூளைச்சலவை செய்யப்படுவது, கட்டாயக் கருத்தடை, குடும்பக் கட்டுப்பாடு, கொத்தடிமைகளாக்குவது போன்ற மனித உரிமை மீறல்கள் நடைபெற்றுவருவதாக கூறியுள்ளானர்.
Share it if you like it