சீனாவின் முன்னாள் கால் பந்து வீரரும், சீன மக்களால் பெரிதும் நேசிக்கப்படுபவருமான ஹாவ் ஹைடோங் அண்மையில் காணொலி ஒன்றினை வெளியிட்டு ஜி ஜின் பிங் அரசாங்கத்தையும் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியையும் மனித குலத்திலிருந்தே வெளியேற்ற வேண்டும் என்று தனது கடும் எதிர்ப்பினை தெரிவித்துள்ளார்.
அக்காணொலியில் ஹாவ் ஹைடோங் மேலும் இவ்வாறு கூறியுள்ளார்.
இந்த கம்யூனிஸ்ட் கட்சி சீன மக்களை காலில் போட்டு மிதித்து விடக்கூடாது என்பது எனது எண்ணம். கம்யூனிஸ்ட் கட்சியை மனிதநேயத்திலிருந்து வெளியேற்ற வேண்டும் என்று நான் விரும்புகிறேன். என் 50 வருட வாழ்க்கைக்குப் பிறகு நான் தெரிந்து கொண்ட முடிவு இது தான்.
ஹாங்காங், திபெத், மற்றும் தைவானுக்கு உண்மையான சுதந்திரத்தை வழங்க வேண்டும். பெய்ஜிங் உலகத்தின் மீது “உயிரியல் போரை” தொடங்கியுள்ளது என்று கடுமையாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். தற்பொழுது அமெரிக்காவில் உள்ள ஹாவ் ஹைடோங் சீனாவிற்கு எதிராக இந்த பிரச்சாரத்தை துவங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.