கோவை: (06.09.2029) தொடர் மழையால் கோவையில் நேற்றிரவு வீடு இடிந்து விழுந்தது. இடிபாட்டில் சிக்கிய இருவர் பலியாகினர். ஆறு வயது குழந்தை உட்பட 5 பேர் மீட்கப்பட்டனர். மேலும் ஒருவரை மீட்கும் பணி நடந்து வருகிறது.
கார்த்தீஸ்வரன் என்பவர் முதலில் பார்க்கிறார், அவர் சம்பவ இடத்திற்குள் புகுந்து இடர்பாடுகளில் சிக்கி இருந்த 3-பேரை தனது உயிரையும் பொருட்படுத்தாது காப்பாற்றுகிறார். அவர் RSS-காரர் உடனடியாக மற்ற RSS-காரர்கள் அனைவர்க்கும் கார்த்தீஸ்வரன்ஜி தகவல் கொடுத்து அங்கு 100-க்கும் மேற்பட்ட
சேவாபாரதி மற்றும் ஸ்வயம்சேவகர்கள் கூடுகிறார்கள். வெகுவிரைவாக மீட்புப்பணிகள் நடைபெறுகிறது… தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை ஆர்.எஸ்.எஸ்காரர்களின் துணையுடன் மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
கோவை, செட்டி வீதியில் கண்ணன் என்பவருக்கு இரண்டு அடுக்கு வீடு உள்ளது. இதில் முதல் தளத்தில், மனைவி ஸ்வேதா, ஆறு வயது குழந்தை தன்வீர் மற்றும் அவரது தாய் வனஜா, தங்கை கவிதா ஆகியோர் வசித்து வந்தனர்.தரை தளத்தில் ஒரு குடும்பம் வசித்து வந்தனர். நேற்றிரவு(செப்.,6) பெய்த கன மழையில் பலத்த சத்தத்துடன் வீடு இடிந்து, அருகிலுள்ள ஓட்டு வீட்டின் மீது விழுந்தது.
இந்த சம்பவத்தில், ஸ்வேதா மற்றும் ஓட்டு வீட்டில் இருந்த கோபால்சாமி ஆகியோர் உயிரிழந்தனர்.
நேற்றிரவு 11:30 மணியளவில், இடிபாடுகளில் சிக்கியிருந்த ஆறு வயது குழந்தை தன்வீர் மற்றும் வனஜா(68) ஆகிய இருவரும் மீட்கப்பட்டனர். தொடர்ந்து நடந்த மீட்பு பணியில் மனோஜ்குமார்(49), கவிதா(38), கஸ்தூரி, ஆகியோர் மீட்கப்பட்டனர். இடிபாடுக்குள் சிக்கி கொண்ட மற்றொரு நபர் மணிகண்டன் என்பவரும் மீட்கப்பட்டார்.
சம்பவம் நடைபெற்ற இடத்தை கலெக்டர் ராஜாமணி, போலீஸ் கமிஷனர் சுமித்சரண் நேரில் வந்து பார்வையிட்டனர். மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
அனைவரும் பூர்ண குணமடைய வேண்டிக்கொள்கிறேன்… RSS காரர்களுக்கு நன்றியை தெரிவித்துகொள்கிறேன்