டெல்லி ஜாமியாவில் துப்பாக்கிச் சூடு- பின்னணி என்ன..?

டெல்லி ஜாமியாவில் துப்பாக்கிச் சூடு- பின்னணி என்ன..?

Share it if you like it

டெல்லி ஜாமியா பல்கலைக்கழகத்தில் மர்மநபர் ஒருவர் கையில் துப்பாக்கியுடன் கண்ணில் பட்டவர்களை பார்த்து சுட்டவாறு சென்றார். அவரை காவல் துறையினர் மடக்கிப்பிடித்து கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இந்நிலையில் அந்த நபரின் பெயர் ராம்பக்த் கோபால் என்றும் அவர் ஹிந்துத்துவ சிந்தனையாளர் என்றும் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரான போராட்டத்தை திசை திருப்பவே மத்திய அரசு இவரை போன்ற சமூகவிரோதிகளை ஏவிவிடுவதாகவும் சமூகவலைத்தளங்களில் கருத்துக்களை பரப்ப துவங்கிவிட்டனர்.

ஆனால் அவரின் முகநூல் கணக்கை ஆராய்ந்ததில் அவர் கடந்த ஜூலை 2018 ம் ஆண்டுதான் முகநூல் கணக்கையே துவங்கியுள்ளார் என்பதும் துவங்கிய நாள் முதல் எந்தப்பதிவையும் போடாமல் ஹிந்து அமைப்புகளில் உள்ளவர்களுக்கு friend request ஐ மட்டும் ஆனுப்பியவண்ணம் இருந்துள்ளார். பின்னர் ஒன்றரை வருடம் கழித்து 2019 அக்டோபர் 11ல் தான் தனது முதல் பதிவை போட்டுள்ளார் அதுவும் கையில் வாளுடன்,கவி துன்டை கழுத்தில் போட்டவன்னம் திட்டமிட்டே போட்டோ ஷூட் நடத்தியிருப்பது தெரிகிறது.

டெல்லி ஜாமியாவில் துப்பாக்கிச் சூடு- பின்னணி என்ன..?
தன்னை ஹிந்துத்துவ போராளி போல் கட்டி கொண்ட முகநூல் பதிவு 
டெல்லி ஜாமியாவில் துப்பாக்கிச் சூடு- பின்னணி என்ன..?
தன்னை ஹிந்துத்துவ போராளி போல் கட்டி கொண்ட முகநூல் பதிவு

இவற்றை பார்க்கும் போதுதான் நமக்கு சந்தேகம் எழுகிறது பிறந்தகுழந்தை கூட முகநூல் கணக்கு வைத்திருக்கும் இந்த காலத்தில் சுமார் 27 வயது மதிக்கத்தக்க இந்த நபர்,
*டெல்லி தேர்தல் நெருங்கிய பின்னர் கணக்கை துவங்கியதும்.

*அதுவும் தன்னை ராம பக்தரை போல் போஸ்ட் போட்டு பட்டவர்த்தனப்படுத்தி கொண்டதும்.

*ஓராண்டாக எந்த பதிவையும் போடாமல் இந்த மாதம் 6ம் தேதி முதல் முகநூலில் பதிவிட துவங்கியதும்.

*துப்பாக்கி சூட்டிற்கு செல்வதற்கு முன்னர் முகநூல் நேரலையில் சம்பந்தமே இல்லாமல் தன்னை வெளிப்படுத்தி கொண்டதும்.

*தான் இறந்த பின்னர் காவி துணியை தன் மீது போர்த்த வேண்டும் என்று போஸ்ட் போட்டதும்

*துப்பாக்கியை பார்த்து அனைவரும் பயந்து ஓடும் நிலையில் ஒருவர் மட்டும் சரியாக இவரை நோக்கி வந்து துப்பாக்கி குண்டை கையில் வாங்கியதும்

*அனைத்திற்கும் மேலாக இந்த சம்பவத்தை நிகழ்த்த இவர் தேர்ந்தெடுத்த தேதி காந்தியை கோட்ஸே சுட்டு கொன்ற அதே தினத்தை என்பதும்

இவர்மீது பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவற்றை எல்லாம் வைத்து பார்க்கும்போது டெல்லி தேர்தலுக்காக யாரோ ஒருவருடமாக இவரை பின்னாலிருந்து இயக்கி இப்பொழுது தனது சதி திட்டங்களை அமல்படுத்த துவங்கி இருப்பது தெளிவாக தெரிகிறது என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Mediyaan Investigation Team


Share it if you like it