தடையை மீறி முஸ்லீம்கள் தொழுகை – மசூதியை மூடி சீல் வைத்த அதிகாரிகள் !

தடையை மீறி முஸ்லீம்கள் தொழுகை – மசூதியை மூடி சீல் வைத்த அதிகாரிகள் !

Share it if you like it

  • நேற்று தடையை மீறி இஸ்லாமிய அடிப்படைவாதிகள் மசூதியில் கூட்டமாக தொழுகை நடத்தியதால், டெல்லி நிஜாமுதீன் தர்கா பகுதியில் உள்ள பங்களேவாலி மஸ்ஜித் என்று அழைக்கப்படும் மசூதியானது அரசு அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டது.
  • இந்தியாவும், முழு உலகமும் கொரோனா வைரசை எதிர்த்து போராடி வரும் இந்நிலையில், ​​தப்லிகி ஜமாத் என்கிற ஒரு இஸ்லாமிய அமைப்பானது, தங்கள் போதகர்கள் மற்றும் பின்பற்றுபவர்களின் இஸ்லாமிய சபை கூட்டத்தை நடத்தி வருவது மட்டுமல்லாமல், நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான இஸ்லாமிய விசுவாசிகள் ஒன்று கூடி பின்னர் உலகம் முழுவதும் பயணம் செய்வதற்கும் அனுமதி அளித்திருக்கிறது. தப்லிகி ஜமாத் அமைப்பானது ஆண்டுதோறும் நடத்தி வரக்கூடிய நிகழ்ச்சியை டெல்லியில் மட்டுமல்லாமல் லாகூர், மலேசியா போன்ற பல இடங்களில் நடத்தியுள்ளனர்.
  • மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தமிழ்நாட்டிலிருந்து நிறைய பேர் சென்றுள்ளனர். அந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு திரும்பி வந்த 30 க்கும் மேற்ப்பட்டோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனால் தான் தமிழ்நாட்டில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகமானது. மேலும் அவர்களோடு தொடர்பில் இருந்தவர்களையும் கண்காணித்து வருவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
  • அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பல நாடுகளை சேர்ந்தவர்களுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி பல பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

Share it if you like it