நமது முன்னோர்கள் வழங்கிய அருட்கொடைகளில் மிக முக்கியமான ஒன்று யோகா என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. இந்த யோக பயிற்சிக்கலையினை மனம் மேன்மைபெற, அறிவு செம்மையுற மற்றும் உடல் அனைத்து வலிமையும்பெற பயின்று வந்தனர். இந்நிலையில்
ஜூன் 21 2020, சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு EBST, மீடியான் மற்றும் தன்னார்வ அமைப்புகளும் இணைந்து யுவாசனா – 2020 மாநிலம் தழுவிய அளவில் காணொலியில் யோகா போட்டி ஜூன் 14 முதல் 20 வரை நடத்த திட்டமிட்டுள்ளது. யுவாசனா 2020 நிகழ்ச்சியின் நோக்கம், யோக பயிற்சினை இளைஞர்களுக்கு எடுத்துச் செல்லவே. வாருங்கள் இணைந்து பங்கேற்போம்!
மாணவர்கள் வயது 12-25. பங்கேற்பவர்களுக்கு அவரவர் பிரிவிற்கேற்ப சான்றிதழ் வழங்கப்படும். அன்பு வேண்டுகோள்- ஜூன் 21 2020 அன்று அவரவர் வீடுகளில் குடும்பத்தாரோடு யோகா பயிலுவோம்!
பங்கேற்பாளர்கள் பதிவு செய்ய கீழ் குறிப்பிட்டுள்ள லிங்க் சென்று பதிவு செய்யவும் http://ebst.in/ நன்றி…!!