தப்லீக் ஜமாத் அமைப்பு மீது முதல்கட்ட விசாரணையைத் தொடங்கியது சிபிஐ!

தப்லீக் ஜமாத் அமைப்பு மீது முதல்கட்ட விசாரணையைத் தொடங்கியது சிபிஐ!

Share it if you like it

அண்மையில் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி இவ்வாறு கூறயிருந்தார். அகமதாபாத் மற்றும் சூரத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரிக்க முக்கிய காரணம் தப்லீஹி ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள். அகமதாபாத்தை தவிர, மற்றொரு பெரிய நகரமான சூரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

‘தப்லிகி ஜமாத் மக்கள் சூரத் மற்றும் அகமதாபாத்தில் தொடர்ச்சியாக பயணம் மேற்கொண்டார்கள் என்று கூறியிருந்தார். அதே போன்று ஆந்திர முதல்வரும் தப்லீகி ஜமாத் மாநாட்டில் இவ்வளவு நபர்கள் கலந்து கொண்டார்கள் என்று தெரிவித்து இருந்தார்.

மார்ச் முதல் வாரத்தில் நடத்தப்பட்ட தப்லீக் ஜமாத் மாநாட்டில் நாடு முழுவதிலிருந்தும் 9 ஆயிரம் பேர் பங்கேற்று தங்கள் மாநிலங்களுக்குச் சென்றதாகத் தகவல் வெளியானது. தப்லீக் ஜமாத் அமைப்பின் தலைவர் மவுலா சாத் கந்தால்வி மீது டெல்லி போலீஸார் அரசு உத்தரவுகளை மீறி செயல்பட்டதாக வழக்குப்பதிவு செய்து இருந்தனர்.

இதுகுறித்து சிபிஐ அதிகாரிகள் தரப்பில் கூறுகையில் “ தப்லீக் ஜமாத் நிர்வாகிகள் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாகவும், நன்கொடைகள் பெற்றதாகவும் புகார்கள் வந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.


Share it if you like it