சாலையின் இருமருங்கிலும் விவசாயம் செய்ய யோகி அரசு அதிரடி முடிவு!

சாலையின் இருமருங்கிலும் விவசாயம் செய்ய யோகி அரசு அதிரடி முடிவு!

Share it if you like it

யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரபிரதேச அரசு, சாலைகளின் இருபுறமும் அரச மரம், வேப்ப மரம், முருங்கை மரம், மற்றும் பிராமி, அஸ்வகந்தா, ஆமணக்கு மரம் போன்ற  மூலிகை மற்றும் மருத்துவ தாவர மரங்களை நடவு செய்து அதன் மூலம் உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்ய உத்தர பிரதேச அரசு முடிவு செய்துள்ளது.

மருத்துவ மற்றும் மூலிகை மரங்களை நடவு செய்வதன் மூலம் மாநிலத்தில் 800 கி.மீ இயற்கை வழிச்சாலைகளை உருவாக்க முடியும். தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளின் 800 கிலோமீட்டர் சாலைகளில் இந்த தாவரங்கள் பயிரிடப்படும், அவற்றுடன் ஒரு மூலிகைத் தோட்டமும் உருவாக்கப்படும். காற்றை மாசுப்படுத்தும் பாக்டீரியாக்கள் மற்றும் நோய்களைத் இத்தாவரங்கள் தடுக்கும்.

“ஆத்மனிர்பர் பாரத் அபியான் என்று மோடி அரசாங்கம் இத்திட்டத்திற்கு பெயர் இட்டுள்ளளது.” நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அண்மையில், ​​நாட்டில் மூலிகை சாகுபடியை மேம்படுத்துவதற்காக ரூ .4,000 கோடி வழங்க மோடி அரசு உறுதியளிக்கும் என்று அவர் கூறியிருந்தார்.

 


Share it if you like it