ஊரங்கு உத்தரவு அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து ஆர்.எஸ்.எஸ், சேவா பாரதி மற்றும் இன்னும் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் தங்களால் இயன்ற உதவிகளை தமிழகம் மட்டுமில்லாமல் நாடு முழுவதும் செய்து வருகின்றனர். இந்நிலையில்
ஆசியாவிலேயே பெரிய குடிசை பகுதியாகவும் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் இடமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தாராவி திகழ்கிறது. தற்பொழுது கொரோனாவின் கோரப் படியில் அப்பகுதி மக்கள் சிக்கியுள்ளனர். 500 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கும் இந்த பகுதியில் தற்பொழுது 6.5 லட்சம் மக்கள் வசித்து வருகிறார்கள்.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு தற்பொழுது கொரோனா தொற்று ஏற்பட்டு தவித்து வருகிறார்கள். அம்மக்களை காக்கும் பொருட்டு ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவகர்கள் மற்றும் சில தன்னார்வ அமைப்புகள் களத்தில் இறங்கி தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். இப்பணியில் மகளிர் பெரிய எண்ணிக்கையில் பங்கேற்று இருப்பது ஒரு சிறப்பு அம்சமாகும்.