திமுகவின் முழு ஆதரவுடன் ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தி. தங்களின் வாழ்க்கையை வளப்படுத்தி கொள்வதையே, கொள்கையாக கொண்டு வாழும் ஒரு இயக்கம் எதுவென்றால் அது திராவிடர் கழகம் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. ஹிந்து ஆலயம் இருக்கும் பகுதியை குறி வைத்தே இவர்களின் செயல்பாடுகள் இன்று வரை இருந்து வருகிறது. அண்மையில் கோவை மாவட்டத்தில் திகவினரின் சூழ்ச்சியை இந்து முன்னணி முறியடித்துள்ளது. அதை குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளது.
#வெற்றிச்செய்திகள்
கோவை மாவட்டம் சூலூர் தாலுகா அலுவலகத்தில் பல ஆண்டுகளாக அமைந்துள்ள #விநாயகர் சிலை, தி.க வின் வற்புறுத்தலினால் அரசு அதிகாரி ஒருவர் உதவியுடன் இன்று மாலை இடிக்கப்பட்டது. இந்துக்கள் ஒன்றிணைந்த காரணத்தினால் மீண்டும் அதே இடத்தில் சிலை நிறுவப்பட்டு பூஜை செய்யப்பட்டது pic.twitter.com/zBit1VPrZ6— Hindu Munnani (@hindumunnaniorg) August 19, 2020