திமுகவில் குடும்ப ஆதிக்கம் அதிகம் உள்ளதாக. அக்கட்சி உறுப்பினர்களே வெளிப்படையாக கருத்து தெரிவித்து வருகின்றனர். திமுகவை சேர்ந்த எம்.எல்.ஏ கு.க செல்வம் வி.பி. துரைச்சாமி, என்று பலர் அக்கட்சியை விட்டே வெளியே வருகின்றனர். இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் திரு.ஹெச். ராஜா முன்னிலையில் 10071 பேர் திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்து இருப்பது திமுகவின் தலைமைக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
காளையார்கோயில் முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் திரு.மேப்பல் சத்தியநாதன் தலைமையில் 10071பேர் திமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்திருக்கிறார்கள். மேலும் திமுக நிர்வாகிகள் சிவகங்கை முழுவதும் இணைய இருக்கிறார்கள்.தேசிய நீரோட்டத்திற்கு அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன். pic.twitter.com/uOiRHl9uDT
— H Raja (@HRajaBJP) October 7, 2020
Good News.