மனித குலத்திற்கே எதிராக செயல்படும் தீவிரவாதிகளின் புகலிடமாக பாகிஸ்தான் இருந்து வருகிறது. இந்நிலையில் அமைதிக்கு பெயர் பெற்ற இயற்கை சூழல் நிறைந்த நேபாளம் மெல்ல மெல்ல தீவிரவாதிகளின் இன்னொரு குட்டி பாகிஸ்தானாக மாறி வருவதாக இந்திய புலனாய்வு அமைப்புகள் அதிர்ச்சிகரமான அறிக்கையை இந்தியாவிற்கு சமர்ப்பித்துள்ளது.
இதற்கு இரண்டு முக்கிய காரணமாக அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளன ஒன்று, நேபாளத்தில் முஸ்லிம்கள் மீது அதிகரித்து வரும் வஹாபி செல்வாக்கு, இரண்டாவது கம்யூனிஸ்டுகள் அதிகாரத்தில் இருப்பதும் என்று கூறியிருப்பது இந்தியாவிற்கு புது தலைவலியை உண்டாக்கியுள்ளது.
இவர்களுக்கு சவூதி அரேபியா, துருக்கி, பாகிஸ்தான் மற்றும் பிற நாட்டில் உள்ள வசதிப்படைத்தோரிடம் இருந்து ஏராளமான நிதி வருகிறது. நேபாளத்தில் அதிக முஸ்லீம் மக்கள் தொகை கொண்ட மாவட்டங்களில் உள்ள மதரஸாக்கள் மற்றும் மசூதிகளில் தீவிரவாதிகளுக்கு ஆதரவு கரம் கொடுப்பதும்
இந்திய எதிர்ப்பு சக்திகளின் புகலிடமாக நேபாளம் திகழ்கிறது. மேலும் இந்தியாவில் நாசவேலைகளில் ஈடுப்படும் தீவிரவாதிகள் மற்றும் பயங்கரவாத குழுக்கள் பெரும்பான்மையாக இருக்கும் இப்பகுதிகளில் தலைமறைவாகிவிடுகின்றனர். இதனை அடுத்து அமித்ஷா, ராஜ்நாத் சிங், தோவல் மற்றும் ஜெய் சங்கர் ஆகியோர் அவசர ஆலோசனையில் ஈடுப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.