துறவிகள் அதிரடி – அயோத்தி விவகாரத்தில் பாக்.., தலையிட்டால் அடுத்த டார்கெட் பாகிஸ்தான் தான்!

துறவிகள் அதிரடி – அயோத்தி விவகாரத்தில் பாக்.., தலையிட்டால் அடுத்த டார்கெட் பாகிஸ்தான் தான்!

Share it if you like it

இந்தியா மற்றும் பாரதப் பிரதமர் மோடியை டுவிட்டரில் கடுமையாக விமர்சனம் செய்வதிலேயே தனது முழு நேரத்தையும், கவனத்தையும், பிரதமர் இம்ரான் கான் செலுத்தி வருவதை அவரின் டுவிட்டர் பக்கத்தில் காண முடியும். விளையாட்டு வீரர்கள், பத்திரிக்கையாளர்கள், ஊடகங்கள், அனைத்தையும் இந்தியாவிற்கு எதிராக செயல்படுமாறு மறைமுகமாக இம்ரான் கான் தூண்டுவதாக அந்நாட்டின் அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.

கொரோனா தொற்று இருக்கும் சமயத்தில் ஆர்எஸ்எஸ்-பிஜேபி ஒருங்கினணைந்து “இந்துத்துவா” செயலை தடையின்றி முன்னெடுத்துச் செல்கிறது. பாபர் மசூதி இடத்தில் ஆலயம்  கட்டுமானம் தொடங்குவது மற்றொரு படியாகும். இதனை பாக்கிஸ்தான் மக்கள் கண்டிக்கின்றனர். என்று அண்மையில் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அலுவலகம் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தது.

இந்தியாவின் அமைதியை சீர்குலைக்க நினைக்கும் பாகிஸ்தானின் இச்செயலுக்கு இந்தியா முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. அயோத்தியில் உள்ள துறவிகள், பாகிஸ்தான் நாடு தொடர்ந்து எல்லை மீறி வருகிறது. இஸ்லாமாபாத்திலும் ஒரு ராமர் கோயில் கட்டப்படும் என்று இம்ரான் கானை துறவிகள் கடுமையாக எச்சரித்தனர். பாகிஸ்தானின் அர்தமற்ற பேச்சிற்கு இந்தியா தக்க பதிலடி கொடுக்குமாறு இந்திய அரசாங்கத்திடம் துறவிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it