Share it if you like it
சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், தேசிய குடிமக்கள் பதிவேட்டை விரிவுபடுத்தும் எண்ணம் மத்திய அரசிடம் உள்ளது. இருப்பினும் அனைத்து மக்களின் ஒருமித்த கருத்தினை பெற்ற பின்பே அதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ஆகவே சரியான சட்ட நடைமுறைகளை வகுத்தே செயல்படுவோம் என்று கூறியுள்ளார். மேலும் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை ஒன்றாக தொடர்புபடுத்தி இந்தியர்கள் யாரும் குழப்பம் அடைய வேண்டாம் என்று தெளிவுபடுத்தியுள்ளார். முந்தைய காங்கிரஸ் அரசு உகாண்டா, வங்கதேசத்திலிருந்து வந்தவர்களுக்கு குடியுரிமை வழங்கியதை மேற்கோள் காட்டிய அமைச்சர். இதையே நாங்கள் செய்தால் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
Share it if you like it