தொடரும் கன்னியாஸ்திரிகளின் மரணம் அதிர்ச்சி தகவல் வெளியிட்ட- லூசி கலாப்புரா!

தொடரும் கன்னியாஸ்திரிகளின் மரணம் அதிர்ச்சி தகவல் வெளியிட்ட- லூசி கலாப்புரா!

Share it if you like it

கேரளாவில் உள்ள பாலியக்கார பெசிலியன் கான்வென்ட்டில் கன்னியாஸ்தி பணிக்கு படித்து கொண்டு இருந்த 21 வயது திவ்யா பி ஜானி என்னும் இளம் பெண் அண்மையில் கிணற்றில் விழுந்து இறந்தது. கேரளா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தேவாலயம் பாதாள உலகத்தைப் போல செயல்பட்டு வருவதாக கர்தாவின்ட நாமத்தில் என்னும் சுயசரிதை எழுதிய லூசி கலாப்புராவை அவ்வளவு எளிதில் யாரும் மறந்து இருக்க முடியாது. கேரள மட்டுமில்லாது ஒட்டு மொத்த இந்தியாவையும் கதறவிட்ட பாதிரியர் பிராங்கோ மூலக்கலின் முகத்திரையை கிழித்தவர்..அந்த இளம் பெண் இறந்த செய்தி அறிந்த லூசி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த இனிமையான பெண்ணுக்கு என்ன நேர்ந்திருக்கும்? அவரது மரணத்திற்கு யார் காரணம்? இந்த வழக்கில் குறைந்தபட்சம் நீதி கிடைக்குமா? அல்லது, அவரது பெற்றோர் நீதி கிடைக்காமல் அலைந்து திரிவதை நாம் காண வேண்டுமா? ” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அவர் 1987 மற்றும் 2018 க்கு இடையில் மர்மமான முறையில் கான்வென்ட்களில் இறந்து கிடந்த கன்னியாஸ்திரிகளின் நீண்ட பட்டியலை அவர் வெளியிட்டார்.

கத்தோலிக்க கன்னியாஸ்திரி சகோதரி அபயா 1992 மார்ச் 27 அன்று கோட்டயத்தில் உள்ள செயின்ட் பியஸ் எக்ஸ் கான்வென்ட்டில் நீர் கிணற்றில் இறந்து கிடந்தார். 2015 டிசம்பரில், 33 வயதான கன்னியாஸ்திரி, ஸ்டெல்லா உலுப்புனியில் உள்ள சேக்ரட் ஹார்ட் கான்வென்ட் கிணற்றில் இறந்து கிடந்தார்.

செப்டம்பர் 2018 இல், கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் ஒரு கான்வென்ட்டுக்குள் ஒரு கிணற்றில் சூசன் மேத்யூ என்ற 54 வயது கன்னியாஸ்திரி சடலம் கண்டெடுக்கப்பட்டது. தற்பொழுது மீண்டும் ஒரு இளம் பெண் இறந்துள்ளார் என்று கூறியிருப்பது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பாவம் செய்த பாதிரியாரை எதிர்த்து நீதிக்கேட்டு போராடிய கன்னியாஸ்திரிக்கு அநீதி இழைத்த வாடிகன்!

Share it if you like it