நிர்பயா குற்றவாளிகளின் சீராய்வு மனு தள்ளுபடி -தூக்கு தண்டனை உறுதி !

நிர்பயா குற்றவாளிகளின் சீராய்வு மனு தள்ளுபடி -தூக்கு தண்டனை உறுதி !

Share it if you like it

டெல்லியை சேர்ந்த மருத்துவ மாணவி ‘நிர்பயா’, கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 16-ந் தேதி நள்ளிரவு, ஓடும் பஸ்சில் 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். கடுமையாக தாக்கப்பட்டு, பஸ்சில் இருந்து தூக்கி வீசப்பட்டார்.அவர்களை காவல்துறை கைது செய்தது.அதில் ஒருவன் சிறுவன் என்பதால் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டு பின்பு விடுவிக்கபட்டான்.ஒருவன் சிறையிலேயே தரக்கொலை செய்து கொண்டான்.

மீதமுள்ள முகேஷ் (வயது 32), பவன் குப்தா (25), வினய் சர்மா (26), அக்‌ஷய் குமார் சிங் (31) ஆகிய 4 பேருக்கு .
வருகிற 22-ந் தேதி காலை 7 மணிக்கு 4 பேருக்கும் டெல்லி திகார் சிறையில் தூக்கு தண்டனையை நிறைவேற்றுமாறு கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.

இந்த நிலையில், குற்றவாளிகளில் வினய் சர்மா (வயது 26), முகேஷ் குமார் (32) ஆகிய இருவரும் தங்கள் தண்டனையை ரத்து செய்யக்கேட்டு நிவாரண மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்கள் மீது இன்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வில் விசாரணை நடைபெற்றது. 2 குற்றவாளிகளின் சீராய்வு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து அவர்களின் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது. சீராய்வு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதால் வரும் 22-ம் தேதி குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை உறுதியானது.


Share it if you like it