பட்டியல் பெண் சமைத்த உணவை சாப்பிட மறுத்த இஸ்லாமிய அடிப்படைவாதிகள்  – அதே உணவை மென்று ருசித்த பிராமண பிஜேபி எம்பி !

பட்டியல் பெண் சமைத்த உணவை சாப்பிட மறுத்த இஸ்லாமிய அடிப்படைவாதிகள் – அதே உணவை மென்று ருசித்த பிராமண பிஜேபி எம்பி !

Share it if you like it

  • கடந்த வாரம், உத்தரப்பிரதேசத்தில் உள்ள அரசு தனிமைப்படுத்தப்பட்ட நிலையத்தில் பட்டியல் பெண் சமைத்த உணவை சாப்பிட மறுத்ததற்காக இஸ்லாமிய அடிப்படைவாதியான சிராஜ் அகமது மீது பட்டியல் சாதி அட்டூழிய சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. சிராஜ் அகமது கோரக்பூருக்கு அருகில் உள்ள குஷினகர் மாவட்டத்தைச் சேர்ந்த புஜாலி என்ற குர்த் கிராமத்தைச் சேர்ந்தவர்.
  • அந்த தனிமைப்படுத்தப்பட்ட நிலையத்தில் ஐந்து பேர் இருந்தனர். அந்த 5 பேரில் 2 பேர் இஸ்லாமியர்களும், மற்ற 3 பேர் ஹிந்துக்களாக இருந்தனர். அவர்களுக்கு லீலா தேவி என்பவர் உணவு சமைத்து வழங்கி கொண்டிருந்தார். அவர் விடுப்பு எடுத்ததால் பட்டியல் சமூகத்தை சேர்ந்த பெண் ஒருவர் உணவு சமைத்தார். ஆனால் சிராஜ் அகமது சாப்பிட மறுத்துவிட்டார். அஹ்மத் சாப்பிட மறுத்ததை பார்த்து மற்றொரு இஸ்லாமியரும் சாப்பிட மறுத்துவிட்டார். ஆனால் ஹிந்துக்கள் எந்தவித குறையும் சொல்லாமல் அமைதியாக சாப்பிட்டார்கள்.
  • அரசாங்க ஆலோசனைக்கு இணங்க, இந்த குழு ஒரு ஆரம்ப பள்ளியில் தனிமைப்படுத்தப்பட்டது. அவர்கள் மையத்தில் தயாரிக்கப்பட்ட உணவை சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள்.
  • இரண்டு இஸ்லாமிய அடிப்படைவாதிகள் உணவு சாப்பிடாததால் உணவை தயாரித்த பெண் மற்றும் அவரது கணவர் இரண்டு பேரின் இதயமும் உடைந்துபோய் கண்களிலும் கண்ணீர் பெருக்கெடுத்தது. இதுவரை இதுபோல் ஒரு அவமானத்தை நாங்கள் சந்தித்ததில்லை என்று அழுதுகொண்டே கூறினர்.
  • இந்த சம்பவம் குறித்து உள்ளூர் மாவட்ட அதிகாரிகளான துணைப்பிரிவு மாஜிஸ்திரேட் தேஷ்தீபக் சிங் மற்றும் தொகுதி மேம்பாட்டு அதிகாரி ராமகாந்த் ஆகியோருக்கு பிரதான் தகவல் கொடுத்தனர். பின்னர் அவர்கள் மீது சாதி மற்றும் பட்டியல் பழங்குடியினர் (அட்டூழியங்களைத் தடுக்கும்) சட்டத்தின் கீழ் கட்டா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
  • இந்த சம்பவத்தை அறிந்த குஷினகரைச் சேர்ந்த பிஜேபி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் துபே, இத்தகைய பாகுபாடுகளுக்கு எதிராக அப்பகுதியில் சென்று பட்டியல் மக்கள் சமைத்த உணவை சாப்பிட்டார். இதில் எம்பியான துபே பிராணமணர் சமூகத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share it if you like it