Share it if you like it
கதை களம்..!
- மைக்கல் விஜய் தன் ஏரியா பசங்களுக்கு ஒன்று என்றால் முதல் ஆளாக ஓடி வந்து உதவக்கூடியவர். தன்னால் முடிந்த அளவிற்கு தன் ஏரியா புல்லிங்களை பெரியாளாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கின்றார்.
- அப்படியிருக்க அவரை ஒரு கும்பல் எப்போதும் கொலை செய்ய துரத்துகிறது. அப்போது எதிர்ப்பாராத விதமாக தமிழ்நாடு பெண்கள் அணி கோச் விஜய்யின் நண்பர் தாக்கப்படுகின்றார்.
- அதனால் அந்த புட்பால் டீமிற்கு கோச் செய்ய முடியாமல் போக, அந்த இடத்திற்கு ஒரு டைமில் ஒட்டு மொத்த ஸ்டேட்டையும் கலக்கிய விஜய்யை கோச் ஆக சொல்கிறார்.
- ஆனால், பெண்கள் அவரை ஏற்க மறுக்க, அவர்கள் மனதை வென்றதோடு, அந்த அணியையும் விஜய் எப்படி வெல்ல வைக்கின்றார் என்பதே மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
- விஜய்..விஜய்..விஜய் மட்டும் தான், அவர் ஒருவரை நம்பி தான் படம் என்றாலும், இத்தனை நட்சத்திரங்கள் இருந்தும் விஜய் மட்டுமே தான் முழுப்படத்தையும் தோளில் சுமக்கின்றார். ஆட்டம், பாட்டம் என்று ஜாலியாகவும் சரி, தன் புல்லிங்கோ முன்னேற வேண்டும் என்று கத்தியை எடுத்த ராயப்பனாகவும் சரி தொட்டதெல்லாம் சறுக்கல் தான்.
- ஆனால், ராயப்பன் கதாபாத்திரம் அப்பாவாக இல்லாமல் அண்ணனாக காட்டியிருந்தால் இன்னும் தூளாக இருந்திருக்கும். ஏனெனில் விஜய்க்கு வயதான கதாபாத்திரம் கொஞ்சம் கூட செட் ஆகவில்லை, அதிலும் நயன்தாரா அவரை அப்பா என்று கூப்பிடுவதெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாதவை.
- படம் பெண்களுக்கு முக்கியத்துவம் கொண்டது, சிங்கப்பெண்ணே பாடல் எல்லாம் பட்டித்தொட்டியெல்லாம் ஹிட் அடித்தாலும் படமாக பார்க்கும் போது அங்கும் இங்கும் எமோஷ்னல் ஒர்க் ஆகியுள்ளதே தவிர படம் முழுவதும் ஒரு நிறைவு இல்லை.
- அதிலும் படத்தின் முதல் பாதி ஒரு கட்டத்தில் பொறுமையை சோதித்து அட புட்பால் மேட்சுக்கு போங்கப்பா என்று சொல்ல வைக்கின்றது. அதே நேரத்தில் மேட்ச் வரும்போது எட்ஜ் ஆப் தி சீட் வருவோம் என்று பார்த்தால் மாற்றி மாற்றி கோல் அடிக்கிறார்களே தவிர நமக்கு எந்த ஒரு ஆர்வமும் வரவில்லை, இதற்கு சக்தே இந்தியாவும் ஒரு காரணம்.
- மேலும் விஜய் காமெடி செய்யும் போது சென்னை ஸ்லாங்கில் பேசுவது, சீரியஸாக பேசும் போது நார்மல் தமிழில் பேசுகிறார். புல்லிங்கோவை கௌரவப்படுத்துகிறோம் என்று தொடர்ந்து தன்னை தான கலாய்த்து கொள்கிறார்.
- படத்தின் மிகப்பெரிய பலம் விஷ்ணுவின் ஒளிப்பதிவு, செம்ம கலர்புல் காட்சிகள், ரகுமானின் பின்னணி இசை மாஸுக்கு கைக்கொடுக்கவில்லை என்றாலும் எமோஷ்னல் காட்சிக்கு சூப்பர். ரூபன் இன்னும் கொஞ்சம் கத்திரி போட்டு இருக்கலாம்.
பல்ப்ஸ்
- படத்தின் முதல் பாதி, ராயப்பன் கதாப்பாத்திரம் இன்னும் அழுத்தமாக இருந்திருக்கலாம்.
- கதிர், நயன்தாரா, ஆனந்த் ராஜ் என பல நட்சத்திரங்கள் எதற்கு என்றே தெரியவில்லை.
- போட்டிகளில் சுவாரஸ்யம் கூட்டியிருக்கலாம்.
மொத்தத்தில் பிகில் சத்தம் கொஞ்சம் குறைவு தான்.
Share it if you like it