சீக்கியர்களின் வணக்கத்திற்குரிய குருமார்களில் ஒருவரான நான்கானா சாஹிப் குருத்வாரா பாகிஸ்தானில் உள்ளது. இதன் மீது நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து இந்தியா முழுவதும் உள்ள சீக்கியர்களின் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
இந்நிலையில் பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் இம்ரான்கான், உருவபொம்மையை எரித்து மக்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் நோக்கி சீக்கியர்கள் பேரணியாக சென்று தங்கள் எதிர்ப்பை காட்டி வருகின்றனர்.
போராட்டகார்கள் குருத்துவாராவை தேசப்படுத்தியது மட்டுமில்லாமல் அவ்விடத்தை, அழித்து மசூதி கட்டுவோம் என்று கோஷம் எழுப்பியதும் சீக்கியர்கள்,இந்நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று கூறி வருகின்றனர்.
இந்நிலையில் குருத்வாரா தாக்குதல் மூலம் பாகிஸ்தானில் சிறுபான்மையினர் நிலை என்னவென்று தெரியவந்துள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங்புரி தெரிவித்துள்ளார். மேலும் இந்திய வெளியுறவுத்துறை குருத்துவாராவை தாக்கியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளது..