பிரதமரின் ஊரடங்கு உத்தரவு கோரிக்கை – பின்பற்றிய சென்னைவாசிகள் !

பிரதமரின் ஊரடங்கு உத்தரவு கோரிக்கை – பின்பற்றிய சென்னைவாசிகள் !

Share it if you like it

  • உலகம் முழுவதும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இந்தியாவை பாராட்டி வரும் நிலையில் இன்று “ஜனதா கர்ஃயு” சுய ஊரடங்கினை மக்கள் கடைபிடிக்க வேண்டும் என பிரதமர் கோரிக்கையை விடுத்திருந்தார். இதனை ஏற்று இந்தியாவின் மக்கள் நெரிசல் மிகுந்த நகரங்களில் ஒன்றான சென்னை இன்று வெறிச்சோடி காணப்பட்டது. பிரதமரின் கோரிக்கையை ஏற்று செயல்படும் சென்னை மக்களின் இந்த செயல் மிகவும் பாராட்டதக்கது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
  • எப்பொழுதும் கூட்ட நெரிசல் நிறைந்த பகுதியாக காணப்படும் சென்னை அண்ணா சாலை என்ற பகுதியில் மார்ச் 22 ஆன இன்று மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.

  • சென்னை ரிச்சி ஸ்ட்ரீட் என்ற பகுதியானது மின்னணு பொருட்கள் வாங்குவதற்கு, எப்பொழுதும் மக்கள் கூட்ட நெரிசல் நிறைந்த பகுதியான ரிச்சி ஸ்ட்ரீட் பகுதியும் இன்று வெறிசோடி காணப்பட்டது.

  • சென்னை புதுப்பேட்டையில் இருசக்கர வாகனங்களின் உதிரி பாகங்களை வாங்குவதற்கு எப்பொழுதும் இளைஞர்களின் கூட்டம் மலை போன்று குவிந்து கிடப்பார்கள். ஆனால் இன்று அந்த பகுதியும் வெறிச்சோடி காணப்பட்டது.

  • சென்னை எழும்பூரில் உள்ள ரயில் நிலையத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வெளியூர் ரயில்களும், சென்னை உள்ளூர் ரயில்களும் வந்துபோகும் பகுதியில் எப்பொழுதும் மக்களின் கூட்ட நெரிசலாக காணப்படும். அப்பகுதியும் இன்று வெறிச்சோடி காணப்பட்டது.

  • சென்னை புரசைவாக்கத்தில் அதிக வாகனங்களில் மக்கள் வந்து செல்கின்ற பகுதியாகும். அந்த பகுதியும் இன்று வெறிசோடி காணப்பட்டது.

  • சென்னை புளியந்தோப்பு என்ற பகுதியும் மக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படும். அந்த பகுதியும் இன்று வெறிச்சோடி காணப்பட்டது.

  • சென்னை சேத்துப்பட்டு பகுதியும் மக்களின் கூட்ட நெரிசலுக்கு பெயர் போன பகுதியாகும். அந்த பகுதியும் இன்று வெறிச்சோடி காணப்பட்டது.

  • சென்னை கோயம்பேட்டிலிருந்து ஆந்திரா,கொல்கத்தா செல்லும் கூட்ட நெரிசல் பகுதியான ரெட்டேரியிலும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.


Share it if you like it