பிரதமரை விமர்சித்தால் கருத்து சுதந்திரம், எம்பியை விமர்சித்தால் கடும் கண்டனமா ?

பிரதமரை விமர்சித்தால் கருத்து சுதந்திரம், எம்பியை விமர்சித்தால் கடும் கண்டனமா ?

Share it if you like it

  • நேற்று நடந்த தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் கரூர் எம்பி ஜோதிமணி பாரத பிரதமர் மோடியை கற்களால் அடிக்க வேண்டும் என்று வன்முறை தூண்டும் வகையில் கோபமாக பேசினார். அதற்கு பாஜக பொறுப்பாளர் கரு.நாகராஜன் அவர்கள் ஒரு எம்பியாக இருந்துகொண்டு இதுபோல் கீழ்த்தரமாக பேசுகிறீர்களே, நீங்கள் எல்லாம் ஒரு பெண்ணா ? என்று கூறினார்.
  • ஜோதிமணியின் இந்த அநாகரிகமான பேச்சுக்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் தமிழக பாஜக இளைஞரணியினர் ஜோதிமணிக்கு எதிராக தனது கண்டனங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
  • ஒரு உயர்ந்த பதவியில் இருந்துகொண்டு பிரதமரை பலகோடி மக்கள் பார்க்கின்ற தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் அவை நாகரிகம் கூட தெரியாமல் அநாகரிகமாக பேசியுள்ளார். ஒரு பிரதமரையே தரக்குறைவாக விமர்சிக்கும் ஜோதிமணி நாளை அவர்கள் தொகுதியில் இருக்கும் மக்கள் ஏதாவது உதவி என்று கேட்டு வந்தால், அவர்களை எந்த அளவுக்கு நடத்துவார்கள் என்று இந்த நிகழ்வு ஒன்றே சான்றாக போதும்.
  • சில ஊடகங்களும் ஜோதிமணி பேசிய வன்முறை பேச்சை பற்றி செய்தி வெளியிடவில்லை மாறாக பாஜகவை மட்டும் விமர்சிக்கும் வகையில் கரு.நாகராஜன் பேசியதை மட்டுமே வெளியிட்டு கண்டனம் தெரிவிக்கிறார்கள். ஆக ஒரு பிரதமரை எவ்வளவு இழிவாகவும் பேசலாம் அதற்கு கருத்து சுதந்திரம் உண்டு. அனால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசினால் மாபெரும் தவறு மற்றும் அதற்கு கண்டனங்களை தெரிவிப்பார்கள். இவ்வாறு நெட்டிசன்கள் தனது கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்

Share it if you like it