பூமியை தோண்டினால் சிவலிங்கமா, மசூதிக்கு முன்பே கோவிலா ? ஆச்சர்ய தகவல் !

பூமியை தோண்டினால் சிவலிங்கமா, மசூதிக்கு முன்பே கோவிலா ? ஆச்சர்ய தகவல் !

Share it if you like it

  • பல ஆண்டுகளாக உச்ச நீதிமன்றத்தில் நடந்து வந்த அயோத்தி நில விவகாரம் தொடர்பான வழக்கில் கடந்த ஆண்டு நவம்பர் ஒன்பதாம் தேதி தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், ராமர் கோவில் கட்டுவதற்கு அனுமதி வழங்கியது. மேலும், ராமர் கோவில் கட்டுவதற்கு ஒரு அறக்கட்டளையை 3 மாதங்களுக்குள் மத்திய அரசு அமைக்க வேண்டும் என்றும், பாபர் மசூதி கட்டுவதற்காகச் சன்னி வக்ஃப் வாரியத்திற்கு 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது.
  • இதனையடுத்து, ராமர் கோவில் கட்டுவதற்கான, 15 உறுப்பினர்கள் அடங்கிய, ‘ஸ்ரீ ராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை’யை, மத்திய அரசு அமைத்தது. அயோத்தியில், ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா, கடந்த, மார்ச் மாதத்தில் நடந்தது. ஆனால், அதன் பின், அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக, கட்டுமானப் பணிகளை துவக்க முடியவில்லை.
  • அயோத்தியில், ராமர் கோவில் கட்டுமானப் பணிகள், 11ம் தேதி துவங்கியது. இதையடுத்து, கோவில் கட்டுவதற்காக பூமியை தோண்டிய போது, அதில், சிவலிங்கம், பல்வேறு பழங்கால சிலைகள், உடைந்த விக்ரகங்கள், சிற்பங்கள் செதுக்கப்பட்ட துாண்கள் கிடைத்துள்ளன.

  • இது பற்றி அறக்கட்டளையின் பொதுச் செயலர், சம்பத் ராய், கோவில் கட்டுவதற்காக, பூமியைத் தோண்டிய போது, சிவலிங்கம், சிற்பத்துாண்கள் உட்பட, பல பொருட்கள் கிடைத்துள்ளன. இவை, பாபர் மசூதி கட்டுவதற்கு முன், அங்கு கோவில் இருந்ததற்கான ஆதாரங்களை, மேலும் உறுதிப்படுத்தி உள்ளது என்று கூறினார்.

Share it if you like it