ஆகஸ்ட் 11 ம் தேதி பெங்களூரில் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் நிகழ்த்திய கலவரம் குறித்து பயங்கரவாத தடுப்புப் படை (ஏடிஎஸ்) நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவரை கைது செய்யப்பட்டுள்ள கலவரக்காரர்களில் 40 பேர் ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளுடன் நேரடி தொடர்பில் இருந்துள்ளனர்.
2013-ம் ஆண்டு பெங்களூரில் உள்ள மாநில பாஜக தலைமையகத்திற்கு அருகே வெடி குண்டுத் தாக்குதலில் ஈடுபட்ட தமிழகத்தைச் சேர்ந்த அல் உம்மாவுடனும், இந்த கலவரக்காரர்களுக்கு நெருங்கிய தொடர்புகள் இருப்பதை காவல்துறை கண்டுபிடித்துள்ளது. 2015-ம் ஆண்டு சர்ச் தெருவில் பயங்கரவாத தாக்குதல் நிகழ்ந்தது. தமிழ்நாட்டை தளமாக கொண்ட தடை செய்யப்பட்ட அல் ஹிந்த் படைப்பிரிவின் தலைவர்களுடன் கலவரக்காரர்கள் பலர் தொடர்பில் இருந்துள்ளனர்.
வெவ்வேறு பெயர்களில் செயல்படும் இந்த பயங்கரவாத அமைப்புகள். உள்ளூர் முஸ்லிம் மக்களை தங்களின் நாச வேலைக்கு ஆட்சேர்ப்பு செய்து வருவது தெரிய வந்துள்ளது. அல் உம்மா இஸ்லாமிய அமைப்பை தமிழக அரசு தடை செய்துள்ளது., ஆனால் அது தற்பொழுது அல் ஹிந்த் படைப்பிரிவாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அல் ஹிந்த் மற்றும் அல் உம்மா ஆகியவற்றுக்கு ஒற்றுமைகள் உள்ளன, அதே நேரத்தில் இந்தியன் முஜாஹிதீன் கீழும் இது செயல்படுகிறது. இந்த இரண்டு அமைப்புகளின் உறுப்பினர்களுக்கும் இந்து அமைப்புகளின் தலைவர்களை கொல்ல வேண்டும் என்பதே பிரதான நோக்கமாக உள்ளது என்று காவல்துறை கருத்து தெரிவித்துள்ளது. எஸ்.டி.பி.ஜ கட்சியை கர்நாடக அரசு தடை செய்ய வேண்டும் என்று அனைத்து தரப்பு மக்களும் கர்நாடக அரசை வலியுறுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மூலக்கூறு- ஆர்கனைசர்