பாகிஸ்தானில் இந்துக்களின் எண்ணிக்கை சுதந்திரத்துக்கு முன்பு இருந்ததை விட இப்பொழுது அவர்களின் நிலை மற்றும் வாழ்வாதாராம் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளன என்பது அனைவரும் அறிந்ததே.
அங்கு ஹிந்து பெண் குழந்தைகள் கட்டாய மதமாற்றம் செய்தும் அவர்களை கடத்தி துன்புறுத்தி திருமணம் செய்யும் நிகழ்வுகள் அவ்வபொழுது செய்திகளில் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் பாகிஸ்தானின் முன்னால் கிரிக்கெட் வீரர் தினேஷ் கனேரியா கடந்த ஆண்டு தாம் ஹிந்து என்கின்ற காரணத்தினால் எப்படி எல்லாம் தம் நாட்டு வீரர்களால் அவர் அவமானப்படுத்தப்பட்டதாகவும்.
தன் நிலையை விளக்கி அந்நாட்டு பிரதமர் இம்ரான்கானிடம் தான் மிகவும் துன்பத்தில் உள்ளேன் எனக்கு உதவி புரியுமாறு கோரிக்கை வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பாகிஸ்தனை சேர்ந்த ஒரு பெண் தினேஷ் கனேரியாவிடம் நீங்கள் இஸ்லாம் மதத்திற்கு மாற வேண்டும்.
என்று டிவிட்டர் பக்கத்தில் கோரிக்கை முன் வைத்தால். அதற்கு அவர் நான் ஹிந்துவாக இருப்பதில் பெருமை கொள்கிறேன், என்று பதில் அளித்து இருப்பதில் இருந்து. அவரின் மன உறுதியையும் அங்குள்ள சிறுப்பான்மையினரின் நலன் கருதியே மத்திய அரசு, கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தின் அவசியத்தையும் நாம் உணர வேண்டும் என்று பலரின் கருத்தாக உள்ளது.