மதுரை ஆதீன மடத்தின் நிலங்கள் ஆக்கிரமிப்பு

மதுரை ஆதீன மடத்தின் நிலங்கள் ஆக்கிரமிப்பு

Share it if you like it

மதுரை ஆதீன மடத்தின் சார்பில் தாக்கல் செய்த மனு: மதுரை ஆதீன மடத்துக்கு மன்னர்கள் உள்ளிட்ட பலர் ஏராளமான நிலம் தானமாக வழங்கியுள்ளனர். தற்போது இந்த நிலங்கள் பலரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதனால் ஆதீன மடத்துக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே, ஆக்கிரமிப்பு செய்துள்ள நிலங்களை மீட்டு ஆதீன மடத்துக்கு வழங்கவேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால், அறநிலையத்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை, ஆக்கிரமிப்பாளர்களும் நிலங்களை காலி செய்யவில்லை. ஆகவே, ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை மீட்டு ஒப்படைக்க இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி எம். கோவிந்தராஜ் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மதுரை ஆதீன மடம் சார்பில் அளிக்கப்பட்டுள்ள விவரங்கள் போதுமானதாக இல்லை. உரிய விவரங்களை ஆதீன மடம் அளிக்க வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. 

இதையடுத்து நீதிபதி, மனுதாரர் அனைத்து விவரங்களுடன் புதிய மனுவை 2 வாரத்துக்குள் தாக்கல் செய்யவேண்டும், அதன் மீது இந்து சமய அறநிலையத்துறை 2 மாதங்களில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு மனுவை முடித்து வைத்தார்.


Share it if you like it