தமிழக மக்களின் உணர்வுகளில் நீங்கா வடுவாக இன்று வரை உள்ள சம்பவங்களில் தாமிரபரணி படுகொலையும் ஒன்று என்பதை யாரும் எளிதில் மறந்து விடமுடியாது. பெண்கள் உட்பட 17 அப்பாவிகள் திமுக ஆட்சியில் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இக்கொடிய செயலை செய்த திமுகவை மறைமுகமாக விமர்சனம் செய்து இருப்பது அக்கட்சியினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி மகன் ஷியாம் கிருஷ்ணசாமி திருமாவிற்கு பின்வருமாறு கருத்து தெரிவித்துள்ளார்.
திமுகவை குறிப்பிடாத்து சின்ன விசயம் தான்..
ஆனால் 1999யில் மாஞ்சோலை பிரச்சனை உச்சக்கட்டத்தில்- சாதி பேதம் இல்லாமல் தொழிலாளர்கள் அணி திரண்ட போது 150 பறையர் குடும்பங்களை பிரித்து நேர் எதிராக செயல்பட வைத்த குற்றவாளி திருமாவளவன் என்பதே வரலாறு, மன்னிக்க முடியாதது. #தாமிரபரணி_படுகொலை https://t.co/k618mgAHU0
— Shyam Krishnasamy (@DrShyamKK) July 23, 2020