மீண்டும் காஷ்மீரில் மூக்கை நுழைக்கும் டிரம்ப்

மீண்டும் காஷ்மீரில் மூக்கை நுழைக்கும் டிரம்ப்

Share it if you like it

இந்தியா – பாக்., இடையேயான காஷ்மீர் பிரச்னையை தீர்ப்பதற்கு உதவ தயாராக உள்ளதாக அ மெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப், இன்னும் சில வாரங்களில் முதல் முறையாக இந்தியா வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சுவிட்சர்லாந்தின் தாவோஸ் நகரில் நடக்கும் உலக பொருளாதார கூட்டத்தில் கலந்து கொண்ட டிரம்ப், பாக்,ல பிரதமர் இம்ரான் கானை சந்தித்து பேசி உள்ளார். இந்த சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், காஷ்மீர் பிரச்னை குறித்தும், அது தொடர்பாக இந்தியா-பாக்., இடையேயான உறவு குறித்தும் பேசினோம். எங்களால் இந்த விவகாரத்தில் உதவ முடியும் என்றால், நிச்சயம் உதவுவோம். இந்த விவகாரத்தை மிக உன்னிப்பாகவும், நெருக்கமாகவும் கவனித்து வருகிறோம். இரு நாட்டு தலைவர்களும் விரும்பினால் நடுநிலையாக இருந்து காஷ்மீர் பிரச்னையை தீர்க்க தயாராக உள்ளோம் என்றார்.

பின்னர் பேசிய இம்ரான் கான், ஆப்கானிஸ்தான் போன்ற பிரச்சனைகளையே நாம் பேச விருபினோம். ஆனால் அதிர்ஷ்டவசமாக மீண்டும் காஷ்மீர் விவகாரம் குறித்தே பேசினோம். நிச்சயமாக இது மிகப் பெரிய பிரச்னை. இந்த விவகாரத்தை தீர்க்க அமெரிக்காவால் மட்டுமே முடியும் என நம்புகிறோம். வேறு எந்த நாட்டாலும் இதற்கு தீர்வு காண முடியாது என்றார். இந்தியாவிற்கு வரும் போது பாக்.,க்கு செல்வீர்கள் என கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த டிரம்ப், இப்போது தான் சென்றோம். அதனால் இந்திய பயணத்தின் போது பாக்., செல்ல வாய்ப்பில்லை. ஆனால் இரு நாடுகளும் நல்ல நண்பர்கள். தொடர்ந்து சிறப்பான நட்புறவை தொடர விம்புகிறோம் என்றார்.


Share it if you like it