ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த நாளில் இருந்து சமூக ஆர்வலர்கள், ஆர்.எஸ்.எஸ், சேவா பாரதி, போன்ற அமைப்புகள் ஏழை, எளியவர்களின், இருப்பிடங்களுக்கே சென்று தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.
இக்கட்டான சூழ்நிலையில் தவிக்கும் மக்களுக்கு உதவிகள் செய்த பல நல்ல உள்ளம் கொண்டவர்கள் வெளி உலகத்திற்கு தெரிய வந்துள்ளனர். மதுரையை சேர்ந்த முடி திருத்தும் தொழிலாளி மோகன் தனது மகளின் படிப்பிற்காக வைத்திருந்த ஜந்து லட்ச ரூபாயை கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நிவாரண பொருட்களுக்கு செலவு செய்து இருந்தார்.
அண்மையில் மனதின் குரல் மூலம் நாட்டு மக்களிடம் வானொலியில் உரையாற்றிய பாரதப் பிரதமர் மோடி மோகன் சேவையை பாராட்டி இருந்தார். இந்நிலையில் முடி திருத்தும் தொழிலாளியின் மகள் நேத்ராவை ஜ.நா சபை ஏழைகளுக்கான நல்லெண்ண தூதராக நியமித்து இருப்பது மதுரை மட்டுமில்லாமல் தமிழகம் முழுவதும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.