Share it if you like it
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட ஷியா வக்பு வாரியம் 51,000 ரூபாய் நன்கொடை அளிப்பதாக அறிவித்துள்ளது. கடந்த சனிக்கிழமையன்று அயோத்தி வழக்கில் குறிப்பிட்ட பகுதியில் ஹிந்துக்கள் ராமர் கோவில் கட்டிக்கொள்ளலாம் எனவும் இஸ்லாமியருக்கு மாற்று இடம்வழங்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனை தொடர்ந்து நீதிமன்ற தீர்ப்பை உத்தரபிரதேச வக்பு வாரிய தலைவர் வாசிம் ரிஸ்மி வரவேற்றுள்ளார். அவர் கூறியதாவது அயோத்தி வழக்கில் நீதிமன்றம் சரியான தீர்ப்பை வழங்கியுள்ளது, அயோத்தியில் ராமர் கோவிலெழுப்புவதன் ராம பக்தர்களின் புகழ் உலகெங்கும் பரவும் என தெரிவித்தார்.
Share it if you like it