வரி ஏய்ப்பு செய்த லயோலா கல்லூரி

வரி ஏய்ப்பு செய்த லயோலா கல்லூரி

Share it if you like it

சென்னை பெருநகர மாநகராட்சியில் சொத்துவரி நிலுவை வைத்துள்ள தனியார் கட்டிடங்கள், பெருநிறுவனங்களிடம் சொத்து வரியை வசூலிக்கும் நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகின்றது.

அந்த வகையில், நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரி நிர்வாகம் சென்னை மாநகராட்சிக்கு இரண்டு ஆண்டுகளாக 96,46,688 ரூபாய் சொத்துவரி கட்டாமல் நிலுவை வைத்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது இதனை தொடர்ந்து லயோலா கல்லூரியை எச்சரித்து மாநகராட்சி நிர்வாகம் நோட்டிஸ் ஒட்டியுள்ளது.ஏற்கனவே சென்னை கபாலீஸ்வரர் கோவில் நிலத்தை ஆங்கிலேயர்கள் கிருஸ்தவ கல்லூரியான லயோலாவிற்கு பட்டா வழங்கியதாகவும் அந்த ஒப்பந்தம் இந்த ஆண்டுடன் நிறைவடைவதாகவும் தகவல்கள் பரவி வரும் நிலையில் இவ்விவகாரம் லயோலா கல்லூரிக்கு புதிய சிக்கலை உருவாக்கி உள்ளது.


Share it if you like it