விண்வெளிக்கு படைதிரட்டும் டிரம்ப்.!

விண்வெளிக்கு படைதிரட்டும் டிரம்ப்.!

Share it if you like it

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் புதிதாக விண்வெளி படை என்றொரு புதிய படைப்பிரிவை அமெரிக்க இராணுவத்தில் தொடங்கிவைத்துள்ளார். அதிபர் டிரம்ப் தேர்தல் பிரச்சாரத்தின் போதே தனியே விண்வெளி படை உருவாக்கப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தார். அதனை நிறைவேற்றும் விதமாக தற்போது விண்வெளிப்படை தொடங்கப்பட்டுள்ளது. அமெரிக்க இராணுவத்தில் ஏற்கனவே தரைப்படை, விமானப்படை , கடற்படை , கப்பல்படை, நீர்மூழ்கிபடை என ஐந்து படைகள் உள்ளன.

தற்போது விண்வெளிப்படையுடன் சேர்த்து ஆறுபடைகளாக உயர்ந்துள்ளன. இந்த புதிய படைப்பிரிவில் 6,000 வீரர்கள் பணியாற்ற இருக்கிறார்கள், மற்ற படைகளுடன் ஒப்பிடும்போது இது மிகவும் சிறிய படைப்பிரிவாகும். விண்வெளியில் அமெரிக்கா எதேச்சி அதிகாரத்துடன், விண்வெளியில் போட்டியை தொடங்கியுள்ளதாக ரஷ்யா கண்டனம் தெரிவித்துள்ளது.!


Share it if you like it