மத்திய வேளாண் துறையால் சாதனை படைத்த விவசாயிகளுக்கு “கிருஷி கர்மான் விருது” வழங்கும் விழா கர்நாடக மாநிலம் தும்கூருவில் உள்ள ஜூனியர் கல்லூரி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் தமிழக விவசாயிகள் உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு பிரதமர் மோடி விருதுகளை வழங்கினார். மேலும் இவ்விழாவில் பேசிய பிரதமர் நேற்று ஒருநாளில் மட்டும் நாடுமுழுவதும் உள்ள ஆறுகோடி விவசாயிகளின் வங்கி கணக்கில் 12,000 கோடி இருப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும், குறைந்தபட்ச ஆதரவு விலையை 1.1/2 மடங்கு ஏற்றி உள்ளதாகவும். கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தமிழ்நாடு, தெலுங்கானாவில் தோட்டக்கலை விளைபொருட்கள் ஏற்றுமதியை ஊக்கப்படுத்த அதற்கான பதப்படுத்தும் மையத்தை அமைக்க முடிவு செய்துள்ளதாகவும் நாட்டை 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் உள்ள நாடாகமாற்ற விவசாயத்தின் பங்கு முக்கியமானது என்றும் தெரிவித்தார்.

விவசாயிகளின் வங்கி கணக்கில்12,000 கோடி இருப்பு வைப்பு
Share it if you like it
Share it if you like it