அகதிகளுக்கு ஆதரவளித்து ஆபத்தில் சிக்கிய சுவீடன் – அமைதிப் பூங்கா எரிவது ஏன்..?

அகதிகளுக்கு ஆதரவளித்து ஆபத்தில் சிக்கிய சுவீடன் – அமைதிப் பூங்கா எரிவது ஏன்..?

Share it if you like it

இதுவரை வெளியாகி உள்ள தகவலின் அடிப்படையில் வடக்கு ஐரோப்பாவில் சில நாடுகள் நோர்டிக் நாடுகள் என்று அழைக்கப்படுகின்றன. இதில் டென்மார்க், நோர்வே, சுவீடன், பின்லாந்து, ஐஸ்லாந்து மற்றும் கிரீன்லாந்து ஆகியவை அடங்கும். இந்த நாட்டில் மக்கள் தொகை மிகவும் குறைவு. உலகில் சமீபத்திய வன்முறைகளில் லட்சக்கணக்கான அகதிகள் இந்த நோர்டிக் நாடுகளில் அடைக்கலம் புகுந்துள்ளனர். இதில் போலந்தைத் தவிர மற்ற நாடுகள் அனைத்தும் ஏராளமான முஸ்லிம் மக்களுக்கு புகலிடம் அளித்தன.

ஸ்வீடனின் தேசியவாத கட்சித் தலைவர் வியாழக்கிழமை மால்மோ நகரில் ‘நோர்டிக் நாடுகளில் இஸ்லாமியமயமாக்கல்’ குறித்த கருத்தரங்கில் கலந்துகொள்ள விருந்தார். இதற்கு அகதிகளாக வந்து குடியேறிய சில அடிப்படைவாத இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சட்டஒழுங்கு சீர்குலையும் என அஞ்சிய அரசு தேசியவாத கட்சித் தலைவருக்கு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதி மறுத்தது. அவர் கட்டாயமாக நகரத்திற்குள் நுழைய முயன்றபோது கைது செய்யப்பட்டார். கோபமடைந்த அவரது ஆதரவாளர்கள் குர்ஆனின் சில நகல்களை எரித்து தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இதனால் கோபம் கொண்ட அடிப்படைவாத இஸ்லாமியர்கள், நகர் முழுவதும் தீ வைத்து, பொதுச் சொத்துக்களை நாசம் செய்தும், பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியும் வன்முறை போராட்டத்தில் இறங்கி உள்ளனர்.


Share it if you like it