அண்மையில் கன்னியாகுமரி மாவட்டம் தாமரைகுளம் பகுதியில் முத்து குமார் என்னும் கூலி தொழிலாளி தனது சொந்த நிலத்தில் கோவில் ஒன்றை உருவாக்கி அதில் பாரத மாதா சிலை ஒன்றினை பிரதிஷ்டை செய்தார்.
இதற்கு கிறிஸ்துவ மிஷநரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன். சமூக நல்லிணக்கம் பாதிக்கப்படும் என்பதால், அச்சிலையை உடனே அகற்ற வேண்டும், என்று கலெக்டரிடம் புகார் தெரிவித்து இருந்தனர். எங்கெல்லாம் கிறிஸ்துவ மிஷநரிகளின் கை ஒங்குகிறதோ அங்கெல்லாம் அவர்கள் வைப்பது மட்டுமே சட்டம்.
இந்நிலையில் சமூக ஆர்வலர், ஆசிரியர், கட்டுரையாளர், என்னும் பன்முக தன்மை கொண்டவர் ரெனீ லின் தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு கூறியுள்ளார்.
இந்தியா முழுவதும் உள்ள கிறிஸ்தவ மிஷனரிகள் ஹிந்துக்களின் சிலை வழிபாட்டு முறைகளை புண்படுத்துவதாக பல்வேறு புகார்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. அவர்களுக்கு என்ன? மன நோயா அல்லது முட்டாள்களா? இந்தியா ஒரு மதச்சார்பற்ற மற்றும் பெரும்பான்மை இந்து நாடு. அவர்கள் விரும்பவில்லை என்றால், ஒரு கிறிஸ்தவ நாட்டில் வாழட்டுமே என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
@Pontifex this too pic.twitter.com/NI9rMRRDPN
— Devavrat 🇮🇳 (@DevavratHindu) May 31, 2020