ஹிந்துக்களின்  சகிப்புத்தன்மையை தொடர்ந்து புண்படுத்தும்- மோகன் சி லாசரஸ்!

ஹிந்துக்களின் சகிப்புத்தன்மையை தொடர்ந்து புண்படுத்தும்- மோகன் சி லாசரஸ்!

Share it if you like it

வெளிநாடுகளில் இருந்து  என்.ஜி.ஓ என்ற பெயரில் கோடிக்கணக்கான  ரூபாய் பெற்றுக்கொண்டு அப்பாவி ஹிந்துகளிடம் ஆசை வார்த்தைகளை கூறியும், இலவசம் என்னும் பெயரில் பரிசுப்பொருட்களை கொடுத்தும், ஏழ்மையை பயன்படுத்தி  நிதி வழங்கி  அவர்களை கிறிஸ்துவத்திற்கு திருப்பி விடுவதே மதபுரோக்கர்  மோகன் சி லாசரஸ்க்கு அவரின் முதலாளிகள் இட்ட கட்டளை என்பது அனைவரும் அறிந்ததே.

ஹிந்து தெய்வங்களையும், புனிதமான ஆலயங்களையும் சாத்தான் இருப்பிடம் என்றும் அவைகளை தேவாலயங்களாக மாற்ற வேண்டும் என தொடர்ந்து ஹிந்து மக்களின் மனம் புண்படும்படி பேசி வருகிறார். இந்நிலையில் “தமிழ்நாட்டில் 60 லட்சம் விசுவாசிகளுடன் 38,000 பெந்தேகோஸ்தே தேவாலயங்கள் உள்ளன.

ஒவ்வொருவரும் ஒரு  ஹிந்துவை மதம் மாற்றினால் 2021ல் ஒரு கோடியே இருபது லட்சம் பேர் அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்த தமிழகத்தையே  நாம் ஆட்டம் காண செய்யாலம்  இந்தியாவில்  மட்டுமே பெரும்பான்மை ஹிந்துக்கள் சிறுபான்மையினருக்கு பயப்படுகிறார்கள்  என ஆணவத்தோடு கூறியுள்ளார்.

மேலும் நல்லவர்களுக்கு ஓட்டு போடும் நிலைமாறி இன்று யாருக்கு ஓட்டு போட வேண்டும் என்ற நிலைக்கு  கிறிஸ்துவர்களை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதும் தங்களை சுயமாக சிந்திக்க விடாமல்  இருப்பதை  கிறிஸ்துவர்கள்  உணர்ந்து அவரிடம்  எச்சரிக்கையாக செயல்பட வேண்டும்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மோடி தோற்று ஓட வேண்டும் அனைவரும் முட்டி போட்டு ஜெபியுங்கள் என மக்கள் குழுமியிருந்த இடத்தில் முதலை  கண்ணீர் வடித்தார். நான் இத்தனை ஆண்டுகள் ஏசுவை ஆராதிக்கிறேன் அவர் என்  கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்றால் நான் ஏசுவை வணங்குவதில் இருந்து வெளியேறுவேன்  என்று ஏசுவுக்கே அறைகூவல் விடுத்தார். ஆனால் நடந்தது என்ன?

எப்பொழுது  ஹிந்துக்கள் சிறுபான்மையினர் ஆகின்றனரோ அன்றே அவர்களின் வழிபாட்டு முறை, கலாச்சாரம், பண்பாடு அனைத்தும் கேள்விக்குறியாகும் என்பதை ஹிந்துக்கள் உணர வேண்டும்.  மோகன் சி லாசரஸ் போடும் பணத்திற்கு இன்று பெரிய பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், சினிமா நட்டசத்திரங்கள்,

அரசியல்வாதிகள் வரை ஹிந்துமதத்தை நேரடியாகவும் மறைமுகமாகவும் விமர்சனம் செய்து வருகின்றனர் என்பதை ஹிந்துக்கள் உணர வேண்டும்.  இவர் மீது பல்வேறு ஹிந்து அமைப்பினர் புகார் தெரிவித்தும்  தன் செல்வாக்கை பயன்படுத்தி வழக்கமான ஹிந்து விரோத பேச்சை பேசி வருவது  வாடிக்கையான ஒன்றாக திகழ்கிறது.

 

 

 


Share it if you like it