Share it if you like it
உலக புகழ் பெற்ற குலசை முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவிற்கு. தமிழக அரசு அனுமதி வழங்காமல் இருந்து வந்தது. ஹிந்துக்கள் மற்றும் ஹிந்து அமைப்புகள் தொடர் பேராட்டத்திற்கு பிறகு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சில கட்டுபாடுகளுடன் பக்தர்களுக்கு தற்பொழுது அனுமதி வழங்கியுள்ளார்.
- திருக்கோவில் விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் கோவில் வளாகத்திற்குள்ளேயே நடைபெறும் .
- கடற்கரையில் எந்தவிதமான நிகழ்வுகளும் நடைபெறாது..
- சூரசம்கார நிகழ்ச்சியானது கோவில் வளாகத்திற்குள்ளேயே நடைபெறும்.
- வெளி மாநிலத்தவர், வெளி மாவட்டத்தின,ர் கலந்துகொள்ள அனுமதி இல்லை..
- வேடம் அணிந்த பக்தர்கள் கோவிலுக்கு வர அனுமதி இல்லை .
- பதிவு செய்யப்பட்ட தசரா குழுக்களுக்கு மட்டும் காப்புகள் வழங்கப்படும் .
- பதிவு செய்யப்பட்ட தசரா குழுக்களில் இருவர் மட்டுமே காப்பு வாங்க அனுமதி.
- பதிவு செய்யாதவர்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் ஏற்பாடுகள் செய்யப்படும் .
- வேஷம் அணியும் பக்தர்கள் அவரவர் ஊரிலேயே அணிந்து கொள்ள வேண்டும்.
- திருவிழாவின் 1 வது, 10 வது நாட்கள் தவிர்த்து மற்ற நாட்களில் நாள் ஒன்றுக்கு 8 ஆயிரம் பேர் ஆன்லைன் மூலம் தரிசனம் செய்ய அனுமதி.
Share it if you like it