தமிழகத்தில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1800 ரையும் கடந்து 2 ஆயிரத்தை நெருங்கி கொண்டு இருக்கிறது. இதில் கிட்டத்தட்ட 80 முதல் 85 சதவீதம் மார்ச் மாதத்தில் டெல்லியில் நடந்த தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள்.
கொரோனா தொற்றால், லட்சக்கணக்கான பேர் அகால மரணம், அடைந்து இருக்கும் இவ்வேளையில் கூட, மனிதத்தை எண்ணி பார்க்காமல். மதத்தை பரப்புவதற்கு ஒரு மாநாட்டை நடத்தியது மட்டுமில்லாமல், அண்டை நாடுகளில் இருந்து பலரையும் அழைத்து வந்துள்ளார்கள்.
இதுபோன்ற நிகழ்வுகளால் தான் தமிழக மக்களுக்கு தப்லீக் ஜமாத் மீது கோபம் ஏற்பட்டு. தங்கள் கோபத்தை சமூக வலைத்தளங்கள், மூலம் பதிவிட்டு வருகின்றனர்.
இச்சூழ்நிலையில் தமிழகத்தை சேர்ந்த, பல இஸ்லாமிய தலைவர்கள், டெல்லியில் உள்ள மற்ற 500 இஸ்லாமியர்களை மீண்டும் தமிழகத்திற்கு அழைத்து வர வேண்டும் என்று பெரிய குண்டை கோரிக்கை என்கின்ற பெயரில் தமிழக அரசிடம் முன் வைத்தனர்.
அவர்களின் கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர். அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டெல்லியில் உள்ள தமிழக இஸ்லாமியர்களை, கவனமாக பார்த்துக்கொள்ள, வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் அவர்களுக்கு வேண்டிய அனைத்து, வசதிகளையும் சிறப்பாக செய்து தர வேண்டும், என்று வலியுறுத்தியுள்ளார்.
இச்செய்தி வெளிவந்த உடன் மக்களின் மனங்களில் பல கேள்விகள் எழுந்தது. நானும் தமிழகத்தை சார்ந்த ஒருவன் என்பதால் என் மனதிலும் ஒரு கேள்வி எழுந்தது.
தமிழக முதல்வரே நீங்கள் செய்வது மதசார்பின்மையா அல்லது இஸ்லாமிய மதத்தை குஷிப்படுத்துவதா? ஏனென்றால் மதசார்பின்மை என்பது நான் புரிந்துகொண்டவரை மதத்தின் அடிப்படையில் மனிதர்களை பிரித்து பார்க்காமல் இருப்பது தான்.
ஆனால் நமது முதல்வர் ஒரு குறிப்பிட்ட மதத்தினரை மட்டும் கவனித்துக் கொள்ளுங்கள் என்று இன்னொரு மாநில முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளது. அவரின் மதசார்பின்மையை கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது.
காரணம் தமிழர்களோ அல்லது தமிழ் ஹிந்துக்கள் என்னவென்றாலும் வைத்துக்கொள்ளுங்கள். அந்த வகுப்பை சார்ந்தவர்களும் டெல்லியில் பல லட்சம் பேர் உள்ளார்கள். அவர்களைப் பற்றி ஏன் அந்தக் கடிதத்தில் குறிப்பிடவில்லை?
மறந்து விட்டீர்களா அல்லது இந்துக்களை பற்றி குறிப்பாக குறிப்பிட்டால் குறிப்பிட்ட மதத்தினருக்கு பிடிக்காமல் போய்விடும் என்பதால் குறிப்பிடவில்லையா? ஐயா இது உங்களுக்கு அநியாயமாக தெரியவில்லையா? ஒரு மதத்தினரை திருப்தி படுத்துவதற்கு இன்னொரு மதத்தினரை புறக்கணிக்கலாமா?
அரசாங்க கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் உபரி நிதியை. முதலமைச்சர் நிவாரண நிதிக்கு மாற்றும் அதே தமிழக அரசு. 50 லட்சம் கிலோ அரிசி இஸ்லாமியர்களின் பண்டிகைக்கு இலவசமாக வழங்குவது சரியா?
பொங்கலுக்கும், தீபாவளிக்கும், அரசு தரும் அனைத்து சலுகைகளும் அனைத்து மதத்தினருக்கும் கொடுக்கின்ற இந்த அரசு. ரம்ஜான் பண்டிகையின் போது அந்த குறிப்பிட்ட மதத்தினருக்கு மட்டும் கொடுப்பது சரியா? இது எல்லாம் மதசார்பின்மை அரசுக்கு அழகா.
முக்கியமான விஷயம் என்னவென்றால் ஒவ்வொரு தேர்தலிலும் மதம் பார்க்காமல் வாக்களிப்பது ஹிந்துக்கள் மட்டுமே. மாற்று மதத்தினர் தங்கள் மத குருக்கள் சொல்லும் கருத்துக்களை கேட்டு வாக்களிக்கிறார்கள் என்பதை தமிழக அரசு மறந்துவிடக்கூடாது. மதச்சார்பின்மைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் தமிழக ஹிந்துக்களை. மற்ற மதத்தினரை திருப்திபடுத்த வேண்டும் என்ற பெயரில் புறக்கணிப்பது வருத்தத்துக்குரியது. மாற்று மதத்தினர் மீது காட்டும் அக்கறையும் அன்பும் சிறிதளவாவது தமிழக இந்துக்கள் மீது காட்டுவீர்கள் என்று நம்புகிறேன்.