ஹிந்து என்பது மதம் அல்ல, அது வாழ்க்கை முறை –  நடிகை பிரணிதாவின் கலக்கல்  பதிவு !

ஹிந்து என்பது மதம் அல்ல, அது வாழ்க்கை முறை – நடிகை பிரணிதாவின் கலக்கல் பதிவு !

Share it if you like it

  • தென்னிந்திய மொழிகளில் 25 படங்களுக்கு மேல் நடித்து முன்னனி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கும் பிரணிதா என்பவர் சமூக வலைத்தளங்களில் ஒரு பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் கொரோனா பற்றியும் ஹிந்து மதத்தை பற்றியும் குறிப்பிட்டுள்ளார். அந்த பதிவில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸை கண்டு கதிகலங்கி நிற்கிறது. சுத்தம் சுகாதாரங்களில் முதன்மையாக இருக்கும் ஐரோப்பிய நாடுகள் பெருமளவில் பாதித்துள்ளன. இந்தியாவில் பாதிப்புகள் மற்ற நாடுகளை விட மிக குறைவுதான். இதற்கு காரணம் நம் வாழ்க்கைமுறை,நமது கலாச்சாரம், நமது பண்பாடு.
  • ஹிந்துக்கள் கைகூப்பி கும்பிட்டு வணக்கம் சொல்வதை பார்த்து சிரித்தார்கள்.
  • ஹிந்துக்கள் வீட்டுக்குள் நுழைவதற்கு முன்னால் கை கால் கழுவுவதை பார்த்து சிரித்தார்கள்.
  • ஹிந்துக்கள், விலங்குகளை வணங்குவதை பார்த்து சிரித்தார்கள்.
  • ஹிந்துக்கள், மரங்களையும் காடுகளையும் வணங்குவதை பார்த்து சிரித்தார்கள்.
  • ஹிந்துக்கள், சைவ உணவை சாப்பிடுவதை பார்த்து சிரித்தார்கள்.
  • ஹிந்துக்கள், இறந்தவர்களை எரிப்பதை பார்த்து சிரித்தார்கள்.
  • ஹிந்துக்கள், இறுதி சடங்கு முடிந்து வீட்டுக்கு வந்தவுடன் குளிப்பதை பார்த்து சிரித்தார்கள்.
  • ஆனால் இப்போது யாரும் சிரிக்கவில்லை, மாறாக சிந்திக்கிறார்கள்
    இந்த பழக்கம்தான் கொரோனா பரவாமல் தடுக்கிறது, ஹிந்து என்பது மதம் அல்ல,அது வாழ்க்கைமுறை
  • இவ்வாறு நடிகை பிரணிதா பதிவிட்டுள்ளார். அந்த பதிவை பலரும் லைக் மட்டும் ரீ-ட்வீட் செய்து வருகிறார்கள். தற்போது அந்த பதிவு வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it