தி.மு.க. ஆட்சியை பற்றி மட்டும் கேட்காதீங்க. பின்னாலேயே வந்து அடிச்சு கொல்லுவானுங்க என்று மூதாட்டி ஒருவர் கூறும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கிறது. இந்த 2 வருட ஆட்சியில் தி.மு.க. செய்த சாதனைகள் என்ன என்று கேட்டால் ஸ்டிக்கர் ஒட்டியது மட்டும்தான் என்று அனைவரும் சொல்வார்கள். ஆனால், முதல்வர் ஸ்டாலினோ, தி.மு.க. ஆட்சியின் சாதனைகளை மக்களுக்கு தெரிவிக்கும் வகையில், தமிழகம் முழுவதும் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தை நடத்தும்படி கட்சியினருக்கு உத்தரவிட்டிருக்கிறார். அதன்படி, மாநிலம் முழுவதும் சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில்தான், வாரிசு சான்றிதழ் வாங்க 2 வருடமாக அலைகிறேன். இதுதான் தி.மு.க. அரசின் சாதனை என்று பொட்டில் அடித்தார்போல சொல்லி இருக்கிறார் மூதாட்டி ஒருவர். அதாவது, தனியார் யூடியூப் சேனல் ஒன்று தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை குறித்து பொதுமக்களிடம் பேட்டி எடுத்திருக்கிறார்கள். அப்போது, ஒரு மூதாட்டியிடம் தி.மு.க. அரசின் 2 ஆட்சி குறித்து கேள்வி எழுப்புகிறார் நிருபர். அதற்கு அந்த மூதாட்டியோ, அதை மட்டும் கேட்காதம்மா. பின்னாலேயே வந்து என்னய அடிச்சு கொல்லுவானுங்க என்று பதட்டத்துடன் கூறுகிறார்.
தொடர்ந்து பேசிய அந்த மூதாட்டி, எனது கணவர் இறந்து ஒன்றை வருடமாகிறது. ஆனால், இதுவரை வாரிசு சான்றிதழ் வாங்க முடியவில்லை. தாலுகா ஆபீஸுக்கு போ, ஆர்.டி.ஓ. ஆபீஸுக்கு போ, பதிவுத்துறைக்கு போ, முதலமைச்சர் செல்லுக்கு அனுப்புன்னு நாயா பேயா அலையவிடுறாங்க. எனக்கு 75 வயசாகுது. முதியோர் பென்ஷனையும் கடந்த ஒன்றரை வருடமா நிப்பாட்டி புட்டானுங்க. இந்த தி.மு.க. ஆட்சி மக்களை அலையவிடுகிறது என்பதுதான் உண்ணை என்று தனது குமுறலை கொட்டித் தீர்த்திருக்கிறார்.
அந்த மூதாட்டி இன்னும் என்னவெல்லாம் சொன்னார் என்பதை தெரிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்யவும்…