2024 தேர்தல் கருத்துக் கணிப்பு: பா.ஜ.க.வே மீண்டும் ஜெயம்… ‘இந்தியா’ கூட்டணிக்கு பிம்பிளிக்கி பிளாப்பி!

2024 தேர்தல் கருத்துக் கணிப்பு: பா.ஜ.க.வே மீண்டும் ஜெயம்… ‘இந்தியா’ கூட்டணிக்கு பிம்பிளிக்கி பிளாப்பி!

Share it if you like it

2024 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வே மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்பது கருத்துக் கணிப்பின் மூலம் தெரியவந்திருக்கிறது. அதேசமயம், தமிழகத்தில் தி.மு.க.வே அதிக இடங்களில் வெற்றிபெறும் என்று கூறப்பட்டிருக்கிறது.

2024 நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக, இந்தியா டி.வி. மற்றும் சி.என்.எக்ஸ். நிறுவனங்கள் இணைந்து கருத்துக் கணிப்பை நடத்தி வருகின்றன. மொத்தமுள்ள 534 தொகுதிகளில் 265 தொகுதிகளில் இந்த கருத்துக் கணிப்பு நடத்தி முடிக்கப்பட்டிருக்கும் நிலையில், மீதியுள்ள தொகுதிகளில் விரைவில் நடத்தப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. முதல்கட்டமாக, டெல்லி, பஞ்சாப், ராஜஸ்தான், சட்டீஸ்கர், மத்திய பிரதேசம், தெலங்கானா, ஆந்திரா, தமிழகம், பீகார், ஜார்கண்ட், ஹிமாச்சல் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், லடாக் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் பல்வேறு அடிப்படையில் கேள்விகள் கேட்கப்பட்டு, இக்கருத்துக்கணிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

முதல்கட்டமாக நடத்தப்பட்ட மேற்கண்ட 265 தொகுதிகளில் 144 தொகுதிகள் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என்றும், எதிர்க்கட்சியியான இந்தியா கூட்டணிக்கு 85 தொகுதிகளும், ஏனைய கட்சிகளுக்கு 36 தொகுதிகள் கிடைக்கும் என்றும் கணிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, மாநிலங்கள் வாரியாக பா.ஜ.க.வின் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு எத்தனை தொகுதிகள் கிடைக்கும் என்பது குறித்தும் தெரிவிக்கப்பட்டிருக்கிறு. அதன்படி, காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் அக்கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மொத்தமுள்ள 25 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 21 தொகுதிகள் கிடைக்கும் என்றும் வெறும் 4 தொகுதிகள் மட்டுமே காங்கிரஸுக்கு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல, பா.ஜ.க. ஆளும் மத்திய பிரதேசத்தில் மொத்தமுள்ள 29 தொகுதிகளில் 24 தொகுதிகள் தே.ஜ. கூட்டணிக்கும், 5 தொகுதிகள் காங்கிரஸ் கூட்டணிக்கும், தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் 30 தொகுதிகளை தி.மு.க. தலைமையிலான கூட்டணி பிடிக்கும் என்றும், மீதமுள்ள 9 தொகுதிகள் பா.ஜ.க. மற்றும் சில உதிரி கட்சிகளுக்கு கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் தே.ஜ. கூட்டணிக்கு 24 தொகுதிகளும், இந்தியா கூட்டணிக்கு 16 தொகுதிகளும், ஆந்திராவில் மொத்தமுள்ள 25 தொகுதிகளில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸுக்கு 18 தொகுதிகளும், தெலுங்கு தேசம் கட்சிக்கு 7 தொகுதிகளும், காங்கிரஸ், பாஜ.க.வுக்கு தற்போதைய நிலவரப்படி பூஜயம்தான் மிஞ்சும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தவிர, தெலங்கானாவில் மொத்தமுள்ள 17 தொகுதிகளில் ஆளும் பாரத் ராஷ்ட்டிரிய சமிதி கட்சிக்கு 9 தொகுதிகளும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 6 தொகுதிகளும், இந்தியா கூட்டணிக்கு 2 தொகுதிகளும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, முதல்கட்ட எடுக்கப்பட்ட மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் அதிகமாக ஆளும் மாநிலங்களில்தான் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டிருக்கிறது. இந்த கருத்துக் கணிப்பிலேயே பா.ஜ.க.தான் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இன்னும் எடுக்க வேண்டிய மாநிலங்களில் பெரும்பாலானவே பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்கள்தான். அதன்படி பார்த்தால், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. அமோக வெற்றிபெற்று 3-வது முறையாக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்பது உறுதியாகி இருக்கிறது.


Share it if you like it