மகாபாரதத்திலும் ‘லவ் ஜிகாத்’: காங்கிரஸ் தலைவர் திமிர் பேச்சு!

மகாபாரதத்திலும் ‘லவ் ஜிகாத்’: காங்கிரஸ் தலைவர் திமிர் பேச்சு!

Share it if you like it

மகாபாரதத்திலும் லவ் ஜிகாத் இருக்கிறது என்று அஸ்ஸாம் மாநில காங்கிரஸ் தலைவர் பூபென் போரா திமிராகக் கூறியிருக்கிறார். இதற்கு பா.ஜ.க., வி.ஹெ.பி. மற்றும் ஹிந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவிக்கவே, தனது பேச்சுக்கு மன்னிப்புக் கோரியிருக்கிறார்.

வேறு மத பெண்களை இஸ்லாமிய இளைஞர்கள் காதலித்து திருமணம் செய்து மதம் மாற்றுவது லவ் ஜிகாத் என்று அழைக்கப்படுகிறது. இவ்வாறு லவ் ஜிகாத்தில் ஈடுபடும் இஸ்லாமிய இளைஞர்களுக்கும், ஹிந்து அமைப்புகளைச் சேர்ந்த இளைஞர்களுக்கும் அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில், அஸ்ஸாம் மாநிலத்தில் சமீபத்தில் 3 முஸ்லீம் இளைஞர்கள் கொல்லப்பட்டனர். இவர்கள் லவ் ஜிகாத் விவகாரத்தால் ஏற்பட்ட மோதலில் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது.

இந்த சூழலில், கடந்த சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த அஸ்ஸாம் மாநில காங்கிரஸ் தலைவர் பூபென் போரா, “மகாபாரதத்தில் காந்தாரியின் குடும்பம் திருதராஷ்டிரனுக்கு தங்களின் மகளை திருமணம் செய்துவைக்க விரும்பவில்லை, பீஷ்மர்தான் கட்டாயப்படுத்தினார். அதேபோல், கிருஷ்ணர் ருக்மணியை திருமணம் செய்ய விரும்பியபோது, அர்ஜூனன் மாறுவேடத்தில் வந்தார். எனவே, மகாபாரதத்திலும்கூட லவ் ஜிஹாத் இருக்கிறது” என்று திமிராகக் கூறியிருந்தார்.

இது பா.ஜ.க. உள்ளிட்ட ஹிந்து அமைப்புகள் இடையே கடும் விமர்சனத்தை கிளப்பியது. மேலும், இதற்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்த அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, “கிருஷ்ணர், ருக்மணி பற்றிய தலைப்பை இழுப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. இது சனாதன தர்மத்துக்கு எதிரானது. மனித குற்றங்களுடன் கடவுள்களை ஒப்பிடுவது ஏற்புடையதல்ல. மேலும், ஒரு பெண் தவறான அடையாளத்தின் அடிப்படையில் திருமணம் செய்து, திருமணத்துக்கு பிறகு மதம் மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், அதுதான் லவ் ஜிகாத். இங்கு கிருஷ்ணர் ருக்மணியை மதம் மாறச் சொல்லவே இல்லை.

எனவே, இப்போது இந்த விவகாரம் தொடர்பாக யாராவது வழக்குப் போட்டால், பூபென் போராவை கைது செய்ய வேண்டி இருக்கும். நான் எப்போதும் இந்து கடவுள்களை வணங்குகிறேன். என்னை நமாஸ் படிக்கச் சொன்னால், எனக்கு எப்படியிருக்கும். திருமணம் செய்துகொண்டாலும் யாரையும் கட்டாயப்படுத்தி மதம் மாற்றக் கூடாது. மேலும், இது சிறப்பு திருமண சட்டத்தின்படி இருக்க வேண்டும். ஆனால், இச்சட்டங்களை நாம் பின்பற்றாமல் மீறப்படும்போது, அது லவ் ஜிகாத்தாக மாறுகிறது. எனவே, சட்டங்களை யாரும் மீற வேண்டாம் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்” என்று பதிலடி கொடுத்தார்.

இதேபோல, பல்வேறு தரப்பிலிருந்து பூபென் போராவுக்கு எதிர்ப்புகள் கிளம்பின. இதையடுத்து, தனது பேச்சுக்கு மன்னிப்புக் கோரியிருக்கிறார். இதுகுறித்து பூபென் போரா நேற்று கூறுகையில், “எனது பேச்சு அஸ்ஸாம் மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் இருப்பதாக அறிகிறேன். இதை எனது தாத்தா கனவில் வந்து கூறினார். எனவே, எனது பேச்சுக்காக கோயிலுக்குச் சென்று விளக்கேற்றி வழிபட்டு, மன்னிப்புக் கேட்க முடிவு செய்திருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.


Share it if you like it