Share it if you like it
ஆயுதக் கொள்முதல் கவுன்சில் கூட்டம் நேற்று ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்தது. அதில், அமெரிக்காவிடம் இருந்து, 72 ஆயிரம், ‘சிக் சாயர் ரைபிள்கள்’ வாங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அந்த துப்பாக்கிகள் இந்தியா – சீனா இடையே உள்ள 3,600 கி.மி எல்லைப் பகுதியில் பணியாற்றும் ராணுவ வீரர்களுக்கு வழங்கப்பட உள்ளது. ”சிக் சாயர்” துப்பாக்கிகளை தான் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தங்கள் ராணுவத்தில் பயன்படுத்துகிறார்கள். இந்த கூட்டத்தில் மேலும் 2,290 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆயுதங்கள் மற்றும் தளவாடங்கள் வாங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
Share it if you like it