Share it if you like it
மஹாராஷ்டிராவில் ஆட்சி அமைக்கப்போவதில்லை என பா.ஜ.க அறிவித்தபின் இரண்டாவது பெரிய தனிப்பெரும் கட்சியான சிவசேனாவை ஆளுநர் ஆட்சியமைக்க அழைத்தார். இதனை தொடர்ந்து காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸுடன் இணைந்து ஆட்சி அமைக்க சிவசேனா முடிவு செய்துள்ளது. இதன் தொடர்ச்சியாக பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து சிவசேனா வெளியேறுகிறது. இதற்க்கு முன்னோட்டமாக சிவசேனாவை சார்ந்த மத்திய அமைச்சர் அரவிந்த் சாவந்த் தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.
Share it if you like it