ஒட்டு போடும் பொது மக்களுக்கு விளம்பர உதவிகளை செய்து விட்டு. டியூஷன் எடுக்கும் ஆசிரியருக்கு 380 கோடி ரூபாய் திமுக என்று வழங்கியதோ. அன்றிலிருந்து இடி, மின்னல், புயல், அக்கட்சியில் எழ துவங்கியது. உதயநிதி தனது ஆட்களுக்கு பதவிகளை கொடுத்து அழகு பார்த்தார். இதனையும் பொறுத்து கொண்டு சில மூத்த நிர்வாகிகள் இன்பநிதி வாழ்க, உதயநிதி வாழ்க, என்று தங்களின் ராஜ விசுவாசத்தை இன்று வரை காட்டி வருகின்றனர்.
பழம் தின்று கொட்டை போட்ட மூத்த கழக கண்மணிகள் தங்கள் இலைக்கு பாயாசம் (பதவி) வரும் என்று எதிர்பார்த்திருந்த வேளையில். பி.கே. மற்றும் உதய் அண்ணாவின் ஆதிக்கம் அதிகரிக்கவே பாயாசத்திற்கு பதில் மண் விழுந்ததை அவர்கள் துளியும் எதிர்பார்க்கவில்லை. கட்சிக்காக உழைத்து ஊறுகாய் போல் கரைந்தவர்கள் தங்களின் உணர்வுகளை. ஸ்டாலினிடம் எடுத்துரைத்தனர், அவரின் அலட்சியமே முறையிட்ட நபர்களுக்கு பதில் என்பதை உணர்ந்து கொண்டவர்கள் திமுக மீது தனது அதிருப்தியை வெளிப்படுத்த துவங்கியுள்ளனர்.
திமுக மூத்த தலைவர் அழகிரி நேற்றைய தினம் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளிக்கும் பொழுது தனது ஆதங்கத்தை இவ்வாறு வெளிப்படுத்தி இருந்தார்.
திமுகவில் பதவி தான் அனைத்தையும் தீர்மானிக்கிறது. அதே நேரத்தில் பதவி மட்டுமே அதிருப்தியை ஏற்படுத்தும் என்று தான் நினைக்கவில்லை. விரக்திக்கு வேறு பல காரணங்களும் இருக்கலாம். தேர்தலுக்கு பின் தி.மு.க இன்னும் பலவற்றை சந்திக்கும். திமுகவில் மூத்த நிர்வாகிகள் அனைவரும் வெளியேறுவது நடந்தே தீரும்.
பி.கே திமுகவுக்கு ஆலோசகராக இருக்கும் வரை. கு.க செல்வம், வி.பி துரைசாமி, போன்ற மூத்த நிர்வாகிகள் இன்னும் பலர் வெளியேறுவார்கள். துரைமுருகன் எதிர்பார்த்த பதவி கிடைக்கவில்லை என்றால். ஸ்டாலின் லட்சியம் வெறும் கனவாகவே மாறிவிடும். பதவி வழங்கினால் மற்ற நிர்வாகிகளின் கடும் கோபத்திற்கு உள்ளாக நேரிடும் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆக்கம்- தஞ்சைதாசன்