Share it if you like it
மஹாராஷ்டிரா அரசியல் நிலவரம் குறித்து ஆலோசிக்க இன்று பிரதமர் நரேந்திர மோடியை, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் சந்தித்து பேசவுள்ளார். சிவசேனா கட்சியானது பா.ஜ.க கூட்டணியை விட்டுவிலகி காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரசுடன் இணைந்து ஆட்சி அமைக்க முயன்று வருகின்றது. இந்நிலையில் இச்சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது. மேலும் பிரதமரிடம் விவசாயிகள் பிரச்சனைகள் குறித்த கோரிக்கைகள் வைக்கப்படும் என எதிர்பாக்கப்படுகின்றது. பாராளுமன்ற மாநிலங்களவையின் 250வது கூட்டத்தில் உரையாற்றிய மோடி தேசியவாத காங்கிரஸ் கட்சியை பாராட்டி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Share it if you like it