Share it if you like it
உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டிகள் சீனாவின் புடியன் நகரில் நடைபெற்றுவருகின்றன. இன்று நடைபெற்ற ஜுனியர் துப்பாக்கி சுடுதலுக்கான இறுதிப்போட்டியில் இந்தியாவின் மனு பாக்கர் தங்கம் பதக்கம் வென்றார். மனு, பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் 244.7 புள்ளிகள் எடுத்து முதலிடம் பிடித்தார். மற்றொரு இந்தியரான யஷாஷ்வினி சிங் ஆறாம் இடம்பிடித்தார். ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் அபிஷேக் வர்மா மற்றும் சவுரப் சவுத்ரி ஆகியோர் இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றனர்.
Share it if you like it