Share it if you like it
ரஷ்யாவை சேர்ந்த அலெக்சாண்டர் லுகானின் என்ற 64 வயதான விஞ்ஞானி ஒருவர் சைபீரியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். இவரது மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்திகளை ரஷ்ய உளவுத் துறை சோதனை செய்த போது இவர் ‘ரஷ்யாவின் தனிப்பட்ட ரகசியங்களை சீனாவுக்கு விற்றது தெரியவந்துள்ளது” இதற்கு சீனா தரப்பிலிருந்து இன்னும் பதில் அளிக்கப்படாத நிலையில் இவரைப்போல இன்னும் பல ரஷ்ய விஞ்ஞானிகளை சீனா மூளைச் சலவை செய்து ரஷ்யாவை உளவுபார்ப்பதாக ரஷ்ய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகளவில் சீனாவின் ஒரே ஆதரவு நாடாகா பார்க்கப்பட்ட ரஷ்யா கடந்த சில காலங்களாக இந்தியாவிற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துவரும் நிலையில் இச்சம்பவம் சீனா – ரஷ்ய இடையே மேலும் விரிசலை ஏற்படுத்தி உள்ளது.
Share it if you like it